தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 6 க்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கு பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பாக தீர்மானிப்பதற்கான நிகழ்நிலை வேலைத்திட்டம் தொடர்பாக பயிற்றுவிப்பதற்கான செயலமர்வு
2022- தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை அடிப்படையில் பாடசாலைகளுக்கு மாணவர்களை தரம் 6 க்கு சேர்த்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகளை தீர்மானிப்பது தொடர்பான நிகழ்நிலை செயற்றிட்டம் தயார்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான பயிற்சி அமர் 2023.02.14 ஆம் திகதி மு.ப 11.00 மணிக்கு டீம் செயலிஊடாக நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வலயக் கல்வி அலுவகங்களில் புலமைப்பரிசில் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடசாலை வழங்குவதற்கு பொறுப்பான விடயப் பணிப்பாளர், தகவல் தொடர்பு விடய பணிப்பாளர், விடய லிகிதர் ஆகியோர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் தகவல்களை நிரப்பி அனுப்புமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
- வலயக் கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி செயலமர்வில் கலந்து கொள்ளல் – 2023.02.14 மு.ப 11.00 மணிக்கு
- வலயக் கல்வி அதிகாரிகள் ஊடாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் –
- 2023.02.14 – 2023.02-17
- அதிபர்கள் ஊடாக தரவுகள் உள்ளீடு செய்தல் – 2023.02.21 – 2023.03.01
- பாடசாலை தொடர்பாக திருத்தங்கள் செய்வதற்கான அவகாசம் – 2023.03.02 – 2023.03.03