7800 College of Education diploma Holders will be appointed soon
தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரர்கள் 7,800 பேர் அடுத்த மாதம் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் தேசிய கல்வி நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளக மதிப்பீட்டுப் புள்ளிகளும் பரீட்சைப் பெறுபேறுகளும் இணைந்த இறுதிப் புள்ளிப் பட்டியல் வெளியானதை அடுத்து நியமனத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் உள்ளடங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, அரச சேவை பட்டதாரிகளை ஆசிரியர் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாளை (25) நடைபெறவிருந்த பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த பரீட்சை தொடர்பாக உயர் நீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த போது அளிக்கப்பட்ட இடைக்கால தடை காரணமாகவே இவ்வாறு பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
විද්යාපීඨ ඩිප්ලෝමාධාරීන් 7,800ක් ලබන මාසයේ ගුරු සේවයට බඳවා ගන්නා බව අධ්යාපන අමාත්යාංශය පවසනවා.