Delay in appointment of Principals – Education Minister explains
அரச சேவை ஆணைக்குழுவின் தாமதம் காரணமாகவே அதிபர் நியமனம் தாமதமடைந்துள்ளது
இலங்கை பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்படவிருந்த நேர்முகத் தேர்வுகள் மற்றும் நியனமங்கள் , அரச சேவை ஆணைக்குழுவின் தீர்மானம் தாமதம் காரணமாக இன்னமும் சாத்தியமாகவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உயர் நீதி மன்றில் உள்ள வழக்கில் சமரசப்படுத்துவதற்கான அவதானங்களை முதலில் அரச சேவை ஆணைக்குழு வழங்கியது. அதன் பின்னர், நியனமத்திற்கான நேர்காணல்கள் தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இரண்டாவதாக அரச சேவை ஆணைக்குழு வழங்கிய அவதானிப்புக்கள் முன்னர் வழங்கிய அவதானிப்புக்களுக்கு முரணாக அமைந்துள்ளது. எனவே நேர்முகத் தேர்வுகளை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் விளக்கினார்.
அத்தோடு அது தொடர்பாக விளக்கம் கோரி ஒரு மாதத்திற்கு முன்னர் அனுப்பிய கடிதத்திற்கு அரச சேவை ஆணைக்குழு இன்னமும் பதில் அனுப்ப வில்லை என அவர் விளக்கினார். இதன் காரணமாக அதிபர் நியனமங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பாராளுன்றில் தெரிவித்தார்.
2022 ஜுன் மாதமளவில் அதிபர்கள் 4800 பேருக்கான வெற்றிடம் நிலவியது. தற்போது அது பாரியளவில் அதிகரித்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
රාජ්ය සේවා කොමිසමේ ප්රමාදය නිසා තමයි විදුහල්පතිවරුන් පත්කිරීම ප්රමාද වෙන්නේ
රාජ්ය සේවා කොමිෂන් සභාවේ තීරණය ප්රමාද වීම හේතුවෙන් ශ්රී ලංකාවේ පාසල්වල විදුහල්පති පුරප්පාඩු පිරවීම සඳහා සම්මුඛ පරීක්ෂණ සහ පත්වීම් ලබාදීමට තවමත් නොහැකි වී ඇති බව අධ්යාපන අමාත්ය සුෂිල් ප්රේමජයන්ත මහතා පවසයි.
මහාධිකරණයේ පවතින නඩුවේදී සමථකට එකගතාව පිළිබඳ නිරීක්ෂණ රාජ්ය සේවා කොමිෂන් සභාව නිකුත් කළා. ඉන් පසුව බඳවා ගැනීම හා සම්මුඛ පරීක්ෂණ සඳහා කටයුතු සම්පාදනය කරන ලදී. කෙසේ වෙතත්, දෙවනුව, රාජ්ය සේවා කොමිෂන් සභාව විසින් කරන ලද නිරීක්ෂණ පෙර නිරීක්ෂණවලට පටහැනිය. එම නිසා සම්මුඛ පරීක්ෂණය පැවැත්වීමට නොහැකි බව අධ්යාපන අමාත්යවරයා පැහැදිලි කළේය.
මේ සම්බන්ධයෙන් පැහැදිලි කිරීමක් ඉල්ලා රාජ්ය සේවා කොමිෂන් සභාව මීට මාසයකට පෙර යැවූ ලිපියට මෙතෙක් පිළිතුරක් එවා නැති බවද ඔහු පැහැදිලි කළේය. මේ හේතුවෙන් විදුහල්පති පත් කිරීමේ හැකියාවක් නොමැති බව අධ්යාපන අමාත්යවරයා පාර්ලිමේන්තුවේදී පැවසීය.
2022 ජූනි වන විට විදුහල්පතිවරුන් 4800ක පුරප්පාඩුවක් තිබුණා. එය දැන් ලෙස ඉහළ ගොස් ඇති බවත් එය සැලකිල්ලට ගත යුතු බවත් අධ්යාපන අමාත්යවරයා පෙන්වා දුන්නේය.