தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்குவதில் இரண்டு பிரதான பிரச்சனைகள் இன்னும் நீடிப்பதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இப்பரச்சினைகள் இரண்டுக்கும் விரைவில் தீர்வு பெற்று, நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி பரீட்சை பெறுபேறுகளின் படி இம்முறை அதிகமான மாணவர்கள் சித்தியடைய தவறியுள்ளமை பிரதான பிரச்சினையாக மாறி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சித்தியடைய தவறிய மாணவர்களின் எண்ணிக்கை ஏனைய வருடங்களை விட மிக உயர்ந்த அளவில் காணப்படுவதனால் இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரியவருகிறது.
மூன்று கல்லூரிகளில் இவ்வாறு அதிகமானவர்கள் சித்தியடையத் தவறியமை பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.
இவர்களுக்கான நியமனங்கள் வழங்குவது தொடர்பாக தீர்மானம் எட்டப்படும் என்றும் அதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் தெரிய வருகிறது.
றுஹுணு தேசிய கல்வியியல் கல்லூரியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தோடு தொடர்பாக சுமார் 50 மாணவர்களின் மாணவர் தகைமை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் சம்பவத்தோடு நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் அல்லர் என்றும் அவர்கள் அனைவரினது மாணவத் தகைமைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, இது தொடர்பாக மறு விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது.
இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர், அவர்களில் நேரடியாக வன்முறையில் தொடர்புபடாத மாணவர்களுக்கும் சேர்த்து நியமனம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விரண்டு விடயங்கள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் எட்டப்பட்ட கையோடு நியமனக் கடிதங்கள் வழங்கும் செயன்முறை அரம்பிக்கப்படும் என தெரியவருகிறது.
இவ்விரண்டு பிரச்சினைகள் தொடர்பான விசாரணைகள் இறுதிக் கட்டத்மை அடைந்துள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
ජාතික අධ්යාපන විද්යා පීඨයේ ඩිප්ලෝමා ගුරුවරුන් පත්කිරීමේ ප්රධාන ගැටලු දෙකක් තවමත් පවතින බව අධ්යාපන අමාත්යාංශයේ ආරංචි මාර්ග සඳහන් කළේය.
මෙම ගැටලු දෙකම කඩිනමින් විසඳා පත්කිරීම සිදුකිරීමට කටයුතු කරමින් සිටින බවද දන්වා ඇත.
අවසන් විභාග ප්රතිඵලවලට අනුව මෙවර සිසුන් වැඩි පිරිසක් පෙනී සිටීමට අසමත් වී ඇති බවත් එය ප්රධාන ගැටලුව වී ඇති බවත් වාර්තා වේ. අනෙකුත් වසරවලට සාපේක්ෂව සමත් සිසුන් සංඛ්යාව ඉහළ මට්ටමක පවතින බැවින් ඒ සම්බන්ධයෙන් පරීක්ෂණ පැවැත්වෙන බව ද දැනගන්නට ඇත.
එම විද්යාල තුනේම මෙතරම් සිසුන් පිරිසක් අසමත් වීම සම්බන්ධයෙන් අවසන් තීරණයක් ගැනීමට නියමිත බවද දැනගන්නට ඇත.
මෙම පිරිස පත්කිරීම සම්බන්ධයෙන් තීරණයකට එළැඹීමට නියමිත බවත් ඒ පිළිබඳව සාකච්ඡා පැවැත්වෙන බවත් දැනගන්නට ඇත.
රුහුණු ජාතික අධ්යාපන විද්යාපීඨයේ ඇති වූ ප්රචණ්ඩකාරී සිද්ධිය සම්බන්ධයෙන් සිසුන් 50 දෙනෙකුගේ පමණ ශිෂ්ය නවාතැන් අවලංගු කර තිබෙනවා. ඔවුන්ගෙන් බොහෝ දෙනෙක් මෙම සිද්ධියට සෘජු සම්බන්ධයක් නොමැති බවත් ඔවුන්ගේ ශිෂ්ය අක්තපත්ර අවලංගු කර ඇති බවට විවිධ විවේචන එල්ලවීමෙන් පසු මේ සම්බන්ධයෙන් යළි පරීක්ෂණ පැවැත්වෙන බවත් දැනගන්නට ඇත.
අවසන් තීරණය ගැනීමෙන් පසු ප්රචණ්ඩ ක්රියාවලට සෘජුව සම්බන්ධ නොවන සිසුන් පත් කිරීමට පියවර ගන්නා බව අධ්යාපන අමාත්යාංශයේ ආරංචි මාර්ග සඳහන් කරයි.
මෙම කරුණු දෙක සම්බන්ධයෙන් අවසන් තීරණවලට එළැඹුණු පසු පත්වීම් ලිපි නිකුත් කිරීමේ කටයුතු ආරම්භ කිරීමට නියමිත බව දැනගන්නට ඇත.
මෙම කරුණු දෙකට අදාළ පරීක්ෂණ අවසන් අදියරට පැමිණ ඇති බවයි අධ්යාපන අමාත්යාංශයේ ජ්යෙෂ්ඨ නිලධාරියෙකු අප වෙත කියා සිටියේ.