கல்வி சீர்திருத்தம் நிறுத்தப்படுகிறது
கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்ததன் காரணமாக இவ்வருடம் ஆரம்பிக்கப்படவிருந்த கல்வி சீர்திருத்தங்களை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக மொடியுல் முறையை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டிருந்தது. அதன் முன்னோடி திட்டமாக நூற்றி எட்டு பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த பாடசாலைகளின் தரம் 1, தரம் 6, தரம் 10 மாணவர்களுக்கு அந்தந்த பாடங்கள் தொடர்பான மொடியுல் தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த்து. இச்செயற்பாடுகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டவை.
தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் கலைத்திட்ட மறுசீரமைப்பு பணிகளை இந்த தவணையிலிருந்து ஆரம்பிக்க அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்திருந்த்து
.
அவற்றில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. பிரதமர் தினேஷ் குணவர்தன, கலாநிதி சுசில் பிரேமஜயந்த, பந்துல குணவர்தன, கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, அலி சப்ரி, கலாநிதி ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, ஜீவன் தொண்டமான் ஆகியோர் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
இந்த உபகுழுவினால் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேற்படி குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 2048ஆம் ஆண்டுக்குள் அபிவிருத்தியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையிலும் கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சரவை உபகுழுவின் கருத்து.
අධ්යාපන ප්රතිසංස්කරණය නවතයි
ජනාධිපති රනිල් වික්රමසිංහගේ ප්රධානත්වයෙන් කැබිනට් අනුකමිටුවක් පත් කර අධ්යාපන ක්ෂේත්රයේ සිදු විය යුතු ප්රතිසංස්කරණ අධ්යයනය කිරීමේ පියවර හේතුවෙන් මෙම වසරේ ආරම්භ කිරීමට සැලසුම් කර තිබූ අධ්යාපන ප්රතිසංස්කරණ අත්හිටුවීමට අධ්යාපන අමාත්යාංශය තීරණය කර තිබේ.
පෙළපොත් වෙනුවට ඒකක (මොඩියුල) ක්රමය හඳුන්වා දීමට අමාත්යාංශය සැලසුම් කර තිබූ අතර එහි නියමු ව්යාපෘතිය ලෙස පාසල් එකසිය අටක් තෝරාගෙන ද තිබිණි. එම පාසල්වල එක, හය සහ දහය ශ්රේණිවල සිසුන් සඳහා ඒ ඒ විෂයයන්වලට අදාළ මොඩියුල සකස් කර ගුරුවරුන් පුහුණු කිරීමට ද පියවර ගෙන තිබූ අතර ඒකක සකස් කිරීම ආරම්භ කළේ මීට වසර හතරකට පමණ පෙර ය.
මෙම වාරයේ සිට එම පාසල්වල ප්රතිසංස්කරණ ක්රියාවලිය ආරම්භ කිරීමට කැබිනට් අනුමැතිය ද ලැබී තිබිණි.
ජනාධිපතිවරයාගෙ සභාපතිත්වයෙන් කැබිනට් අනුකමිටුවක් පත් කරනු ලැබුවේ ඒ අතරය. අගමැති දිනේෂ් ගුණවර්ධන, ආචාර්ය සුසිල් ප්රේමජයන්ත, බන්දුල ගුණවර්ධන, ආචාර්ය විජයදාස රාජපක්ෂ, අලි සබ්රි, වෛද්ය රමේෂ් පතිරණ, ප්රසන්න රණතුංග, කංචන විජේසේකර හා ජීවන් තොණ්ඩමන් යන ඇමැතිවරු එම කමිටුවට අයත් ය.
මෙම අනුකමිටුව විසින් අගමැති ලේකම් අනුර දිසානායකගේ ප්රධානත්වයෙන් විද්වත් කමිටුවක් පත් කරනු ලැබ තිබෙන අතර එම කමිටුවේ නිර්දේශ මත ඉදිරි ක්රියාමාර්ග ගැනීමට නියමිතය. 2048 වසර වන විට සංවර්ධිත රටක් බවට පත් කිරීමේ ඉලක්කය මත අධ්යාපන ප්රතිසංස්කරණ ද පදනම් විය යුතුය යන්න කැබිනට් අනුකමිටුවේ අදහස වී ඇත.