புதிய மாணவர்கள் உள்ளீர்ப்பு நடவடிக்கைகளில் இருந்து கல்லூரி விரிவுரையாளர்கள் விலகினர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் கல்வியிலாளர்களின் கூட்டிணைந்த தொழிற்சங்கம் இது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
இலங்கை ஆசிரியர் கல்வியிலளார்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் தருக் கோரி 15.05.2023 ஆம் திகதி இறுதியாக இடம்பெற்ற கல்வியமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலில் சாதகமான தீர்வு கிடைக்காமையினால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு இறங்கியுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, புதிய மாணவர்கள் உள்வாங்கும் செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதேவேளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அனைத்து அதிகாரிகளும் சுகவீன விடுமுறையில் செல்லவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளில் 19 கல்வியியல் கல்லூரிகள், 8 ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் மற்றும் 113 ஆசிரியர் மத்திய நிலையங்களையும் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து கொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காது விடின் இரு வாரங்களில் இதனை விட கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் சங்கம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்களுக்கு கல்வி அமைச்சே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
විද්යාපීඨ කථිකාචාර්යවරු නවක සිසුන් බඳවා ගැනීමේ ක්රියාවලියෙන් ඉවත්වේ
විවිධ ඉල්ලීම් මුල් කර ගනිමින් ශ්රී ලංකා ගුරු අධ්යාපනවේදීන් වෘත්තීය සමිති ක්රියාකාරකම් ආරම්භ කර ඇති බව නිවේදනය කර ඇත.
ශ්රී ලංකා ගුරු අධ්යාපනඥයින්ගේ ඒකාබද්ධ සංගමය මේ සම්බන්ධයෙන් අධ්යාපන අමාත්යාංශයට ලිඛිතව දන්වා ඇත.
ශ්රී ලාංකේය ගුරු අධ්යාපනඥයින් මුහුණ දෙන ගැටලුවලට විසඳුම් සෙවීම සඳහා අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම්වරයා සමඟ 2023.05.15 දින පැවැති සාකච්ඡාවේදී සාධනීය විසඳුමක් නොලැබීම හේතුවෙන් වෘත්තීය සමිති ක්රියාකාරකම්වලට අවතීර්ණ වූ බව එම සංගමය නිවේදනය කරයි.
ඒ අනුව නවක සිසුන් බඳවා ගැනීමේ කටයුතුවලින් ඉවත් වීමට තීරණය කළ බව ශ්රී ලංකා ගුරු අධ්යාපන සංගමය නිවේදනය කරයි.
මේ අතර සියලු නිලධාරීන් අඟහරුවාදා අසනීප නිවාඩු වාර් ථා කිරීමටද තීරණය කර ඇත.
මෙම වෘත්තීය සමිති ක්රියාකාරකම් සඳහා අධ්යාපන විද්යාපීඨ 19ක, ගුරු පුහුණු ආයතන 8ක සහ ගුරු මධ්යස්ථාන 113ක නිලධාරීන් ද සහභාගි වන බව නිවේදනය කර ඇත.
මෙම ක්රියාමාර්ගයට යහපත් ප්රතිචාරයක් නොලැබුණහොත් සති දෙකකින් දැඩි ක්රියාමාර්ග ගන්නා බව ද එම සංගමය නිවේදනය කර ඇත.
මෙමගින් සිදුවන හානිය සම්බන්ධයෙන් අධ්යාපන අමාත්යාංශය වගකිව යුතු බව ද එම සංගමය කියා සිටියා.