No Private classes on Friday and Sunday in Jaffna District
ஜூலை முதலாம் திகதி முதல் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவதில்லை என யாழ்.மாவட்ட செயலாளர் ஏ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
தரம் 9க்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளின் மனநலம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட சுகாதார, பொலிஸ், தனியார் வகுப்பு உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அபிவிருத்திக் குழுவும் அது தொடர்பில் கலந்துரையாடும் என மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு தனியார் வகுப்புகளும் மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் ஒவ்வொரு தனியார் வகுப்பிலும் பூரண சுகாதார வசதிகள் இருக்க வேண்டும் எனவும் யாழ்.மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
ජුලි 01 වැනි දා සිට සිකුරාදා හා ඉරිදා දිනවල පෞද්ගලික පන්ති නොපවැත්වීමට තීරණය කළ බව යාපනය දිස්ත්රික් ලේකම් ඒ . සිවබාලසුන්දරන් පවසයි.
9 ශ්රේණියෙන් පහළ පන්ති සඳහා සිකුරාදා පස්වරුවේ හා ඉරිදා දිනයේ පෞද්ගලික පන්ති නොපවැත්වීමට තීරණය කළ බව ඔහු ප්රකාශ කරයි.
ළමුන්ගේ මානසික සුවතාවය වෙනුවෙන් එම තීරණය ගත් බව ඔහු වැඩිදුරටත් ප්රකාශ කළේය.
යාපනය දිස්ත්රික්කයේ සෞඛ්ය, පොලිස්, පෞද්ගලික පන්ති හිමිකරුවන්, ගුරුවරුන් හා ළමා සංවර්ධන නිලධාරීන් සමග පැවැති සාකච්ඡාවේදී එම තීරණය ගෙන තිබේ.
ඒ සම්බන්ධයෙන් දිස්ත්රික් සංවර්ධන කමිටුවේදී ද සාකච්ඡා කරන බව දිස්ත්රික් ලේකම්වරයා පැවසුවේය.
සෑම පෞද්ගලික පන්තියක්ම දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ ලියාපදිංචි විය යුතු බව ද යාපනය දිස්ත්රික් ලේකම්වරයා පවසා සිටින අතර සෑම පෞද්ගලික පන්තියක්ම පවත්වාගෙන යාමේදී ඒ සඳහා අවශ්ය සනීපාරක්ෂක පහසුකම් සම්පූර්ණ කර තිබිය යුතු බවයි.