கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வியாபார முகாமைத்துவ இளமாணிப்பட்டம்
வெளிவாரிப்பட்டப்படிப்பு — 2023
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தினால் நடாத்தப்படவுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்ட மேற்படி கற்கை நெறியின் 2020/2021 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன
அனுமதிக்கான தகைமைகள் :
-
- க.பொ.த (உ/த) வர்த்தகத்துறையில் சித்திபெற்றிருப்பதுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கான தகைமையைப் பெற்றிருத்தல்*.
அல்லது
-
- க.பொ.த (உ/த) ஏதேனும் துறையில் சித்தி பெற்றிருப்பதுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கான தகைமையைப் பெற்றிருத்தல்*.
அல்லது
-
- இதனுடன் தொடர்புபட்ட ஒரு தொழில்சார் தகைமையைப் பெற்றிருத்தல்**
அல்லது
- கிழக்குப் பல்கலைக்கழக மூதவையினால் அங்கீகரிக்கப்படக் கூடிய ஏதேனும் கல்விசார்/ தொழில்சார்/ தொழிற் பயிற்சிசார் தகைமையினைப் பெற்றிருத்தல்.
*குறிப்பு
- – க.பொ.த (உ/த) பரீட்சைக்கு 2020ம் வருடம் அல்லது அதற்கு முந்திய வருடங்களில் தோற்றிய மாணவர்கள்.
- – இலங்கை பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கு தகுதியான அதிகூடிய தகைமைகள்.:
-
- அனுமதிக்கப்பட்ட 03 பாடங்களிலும் கூடியது 03 அமர்வுகளுக்கு மேற்படாமல் ஒரே அமர்வில் அனைத்துப் பாடங்களிலும் ‘S’ தரச் சித்தியைப் பெற்றிருத்தல்.
அத்துடன்
- பொதுச் சாதாரணப் பரீட்சையில் (Common General Test) குறைந்தது 30% புள்ளிகளைப் பெற்றிருத்தல்.
-
** மேலதிக தகவல்களை http://www.cedec.esn.ac.lk/bbm என்னும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
தெரிவு நடைமுறைகள்:
அனுமதிக்கான தகைமைகளில் முதல் பிரிவிலுள்ளவர்களுக்கு (பிரிவு (a)) முன்னுரிமை வழங்கப்படும்.
பாடநெறிக்கான காலம் : |
03 வருடங்கள் |
மொழி மூலம் : |
தமிழ் |
பாடநெறிக்கான கட்டணம் : |
ரூ. 110,000.00 03 தவணைகளில் செலுத்தமுடியும் |
விண்ணப்ப நடைமுறைகள்:
விண்ணப்பப்படிவத்தினையும் ஏனைய தகவல்களையும் விண்ணப்பதாரிகள் http://www.cedec.esn.ac.lk/bbm எனும் இணையத்தளத்தில் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரிகள் இணையத்தளத்தினூடாகவும் விண்ணப்பித்தல் கட்டாயமாகும்.
முடிவுத்திகதி : 31 st August 2023
மேலதிக விபரங்கள் :
உதவிப் பதிவாளர்
வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
இல. 50, புதிய வீதி,
மட்டக்களப்பு,
தொ.இல: 065-2227025
மின்னஞ்சல்: [email protected]
இணையம்: http://www.cedec.esn.ac.lk
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வந்தாறுமூலை,
செங்கலடி.
2023-07-16