தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் ஆசிரியர்களின் பிணைத் தொகையை ஐந்து இலட்சம் ரூபாவிலிருந்து பதினேழு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
தேசிய கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் ஆசிரியர்கள் அரசாங்க பாடசாலைகளில் நியமனம் பெறாமல் தனியார் பாடசாலைகளில் நியமனம் பெறுகின்றமை அதிகரித்து வருவதை அடுத்து கல்வி அமைச்சு இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது. இத்தொகையை பதினேழு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கான பிரேரணை தேசிய கல்வியியல் கல்லூரிகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. இது தொடர்பான எமது விசாரணைக்கு பதிலளித்த அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர், இந்த பிரேரணையை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது என்றார்.
கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சி பெறும் சில ஆசிரியர்கள் அரசாங்க பாடசாலைகளில் நியமனம் பெறாமல் தனியார் பள்ளிகளில் நியமனம் பெற்று வருவது தற்போது தெரியவந்துள்ளது. பயிற்சி பெறும் எந்தவொரு ஆசிரியரும் ஐந்து இலட்சம் ரூபா பிணையை செலுத்தி விட்டுச் செல்வது தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் மிகவும் சாதாரணமான தொகை எனவும் மேற்படி அதிகாரி தெரிவித்தார்.
தனியார் பாடசாலைகளும் தங்கள் பாடசாலைகளுக்கு இவ்வாறு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும், இதனால் அந்த பாடசாலைகளின் அங்கீகாரம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயிலுனர்கள் தொடர்ந்தும் தனியார் பாடசாலைகளுக்குச் சென்றால் எதிர்காலத்தில் பாரதூரமான நிலைமை ஏற்படும் எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ජාතික අධ්යාපන විද්යා පීඨවලින් පුහුණුව ලැබූ ගුරුවරුන්ගේ බැඳුම්කරය රුපියල් ලක්ෂ පහේ සිට ලක්ෂ දාහත දක්වා වැඩි කිරීමට අධ්යාපන අමාත්යාංශය අවධානය යොමු කර තිබේ.
බැඳුම්කරය වැඩි කිරීමට අවධානය යොමු කර ඇත්තේ එම ගුරුවරුන් රජයේ පාසල්වල පත්වීම්භා ර නොගෙන පෞද්ගලික පාසල්වල පත්වීම් ලබා ගැනීමේ ප්රවණතාවක් ඇති වෙමින් තිබීමය. රුපියල් ලක්ෂ දාහතක් දක්වා වැඩි කිරීමේ යෝජනාව විද්යා පීඨ මණ්ඩලයට ඉදිරිපත්ව ඇති නමුත් මේ දක්වා අවසන් තීරණයක් ගෙන නැත. එම යෝජනාව කඩිනමින් සම්මත කර ගැනීමේ අවශ්යතාවක් පවතින බව මේ සම්බන්ධයෙන් අප කළ විමසුමකට පිළිතුරු දුන් අමාත්යාංශයේ උසස් නිලධාරියෙක් සඳහන් කළේය.
විද්යා පීඨවලින් පුහුණුව ලබන ඇතැම් ගුරුවරු රජයේ පාසල්වල පත්වීම් භාර නොගෙන පෞද්ගලික පාසල්වල පත්වීම් ලබා ගනිමින් සිටින බව මේ වන විට අනාවරණය වෙමින් පවතියි. පුහුණුව ලබන කිසියම් ගුරුවරයකුට රුපියල් ලක්ෂ පහක බැඳුම්කරය ගෙවා ඉවත් වීමට හැකියාව පවතින අතර පවතින ආර්ථික වාතාවරණය මත රුපියල් ලක්ෂ පහක් යනු ඉතාම සාමාන්ය මුදලක් යැයි ද ඉහත කරුනු දැක්වූ නිලධාරියා කීවේය.
රජයේ පුහුණුව ලබන ගුරුවරුන් සිය පාසල්වලට පත් කර ගැනීමට පෞද්ගලික පාසල් ද විශාල කැමැත්තක් දක්වන බවත් එමගින් එම පාසල්වල පිළිගැනීම තවදුරටත් ඉහළ යන බවත් හෙතෙම සඳහන් කළේය.
පුහුණුව ලබන්නන් දිගින් දිගටම පෞද්ගලික පාසල් කරා යොමු වුවහොත් අනාගතයේ දී බරපතළ තත්ත්වයක් උද්ගත වනු ඇතැයි ද එම නිලධාරියා තවදුරටත් ප්රකාශ කළේය.