தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான அனுமதி எதிர்வரும் 25 ஆம் திகதி இடம் பெறும் என கல்வி அமைச்சு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இம்முறை 8000 பேர் 19 கல்வியியல் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை கல்விக் கல்லூரிகள் ஏற்படுத்தி வருகின்றன.
இதே நேரம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்கள் குறிப்பிட்ட தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய கல்வியியல் கல்லூரி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.