சர்வதேச சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஆங்கில மொழியுடனான பரீட்சயத்தை அதிகரிக்கும் பொருட்டு வாரத்தில் ஒரு நாள் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் மேற்கொள்ளும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கேற்ப தேசிய கல்வி நிறுவகத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை வினைத்திறனாக பயன்படுத்தி ஆங்கில மொழிக்கு பொருத்தமான கற்றல் திட்டங்களை வகுப்பறையினுள் நடைமுறைப்படுத்திவரும் ஆசிரியர்களுக்காக புதிய சுற்றுநிருபமும் அறிவுரைப்பும் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் தொடர்பாடல் மேற்கொள்வதற்கு வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அது ஆங்கில தொடர்பாடல் தினமாக பிரகடனப்படுத்தப்படல் வேண்டும் எனவும் பிரேரிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆங்கில மொழி விருத்தி தொடர்பான திட்டங்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட அவதானங்களின் அடிப்படையில் விருத்தி செய்யப்படவேண்டிய துறைகள் தொடர்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை தொடர்பாக தேவையான நடடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக பரீட்சைகள் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் இணைந்து தொழிலுலகிற்குத் தேவையான வகையில் மாணவர்களுக்குத் தேவையான தேர்ச்சிகளை வழங்கும் திட்டங்கள் தொடர்பாகவும் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கேற்ப இவ்வருடம் இரண்டாம் தவணை முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 6,7,8 ஆகியவற்றில் தவணைப் பரீட்சையில் ஆங்கிலப் பேச்சு மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இம்முறையை தம் 11 வரை விஸ்தரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந் நடைமுறையை இரண்டாம் மொழி தொடர்பாகவும் மேற்கொள்ளப்படுமாயின் உள்ளநாட்டில் மொழியால் பிரிந்துள்ள சமூகங்களையும் இணைக்க முடியும்.
இரு அரச கரும மொழியிலும் அனைவரையும் தேர்ச்சியுளளவர்களாக மாற்ற முடியும்..
நல்லதொரு கருத்து.
Best idea