பாடசாலை தலைமைத்துவத்திற்காக அதிபர்களுக்கு சர்வதேச தரத்திலன பயிற்சியை பெற்றுக்கொடுத்து இலங்கை அதிபர் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடைவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கை அதிபர் சேவைக்கு அமைவாக தரம் 111 தொடக்கம் தரம் 1 வரையில் பதவி உயர்விற்கு தேவையானவற்றை பூர்த்தி செய்வதற்கான செயலாற்றல் அபிவிருத்தி கற்கை நெறிக்கான அதிகபர்களுக்காக மாதாந்த சேவை நிலைய பயிற்சி கற்கை நெறி ஒன்று தற்பொழுது நடைபெறுகின்றது.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் முதல் முறையாக பாடசாலை தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவத்திற்கு தேசிய திறனாற்றல் கட்டமைப்பொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அதிபர் சேவையில் தரம் 111 அதிபர்கள் 1,000 பேருக்கு இவரிடத்தில் பயிற்சி வழங்கப்டவுள்ளது.
சில பாடசாலைகளில் நிலவும் நிதி மேசடி நிர்வாக பிரச்சினை பாடசாலைகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் திடீர் விபத்துக்கள் உள்ளிட்டி அடிக்கடி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட 1,000 அதிபர்களை மதிப்பிடும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பயிற்சிக்கான அனுமதி கிட்டும்.
மதிப்பீட்டு அடிப்படையில் கல்வி அபிவிருத்தி கட்டமைப்பின் கீழ் 41 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனறு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் தரம் 111 இல் 3,823 அதிபர்களுக்கு 2021 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்த பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சின் மனிதவள அபிவிருத்திக் கிளை தெரிவித்துள்ளது. (கல்வி அமைச்சு)