2020 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் சுமார் 6000 கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றப் பிரிவு அறிவித்துள்ளது.
இதில் 10 வருட சேவையைக் கொண்ட ஆசிரியர்கள் 2000 பேரின் விண்ணப்பம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உள்ளடங்கிய ஆசிரியர் இடமாற்ற சபை அமைக்கப்பட்டு இவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.