தேசிய கல்வியியல் கல்லூரிகளிலிருந்து கற்று வெளியாகிய 2015/2017 கல்வி ஆண்டின் ஆசிரியர்களுக்க் 4286 பேருக்கான நியமனங்கள் அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2019 ஆகஸ்ட் 1 ம் திகதி வெளியிடப்பட்டு்ளள இறுதி பெறுபேற்றின் படி இந்த நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்முறை தேசிய பாடசாலைகளுக்கு அதிக நியமனங்களை வழங்கி வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஒன்பது மாகாணங்களிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் தமிழ், சிங்கள, ஆங்கில மொழி மூல வெற்றிடங்கள் தொடர்பாக கல்வி அமைச்சு தரவுகளை சேகரித்துள்ளது. அதன்படி மொத்தம் 3748 வெற்றிடங்கள் தேசிய பாடசாலைகளில் காணப்படுகின்றன. இவ்வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு மீதியானோர் மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.