இலங்கைப் பொலிஸ்
உப பொலிஸ் பரிசோதகர் பதவி (அரச வேவூப் பிரிவூ)
இலங்கைப் பொலிஸின் அரச வேவூப் பிரிவிற்கு தகுதிகாண் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்காக இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
2. கீழ்க்காணும் வகையில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பணிப்பாளர் (ஆட்சேர்ப்பு)/ பயிலுநர் ஆட்சேர்ப்பு பிரிவூ, இல. 375, 1 ஆம் மாடி, ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தை, கொழும்பு 06″” என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும். விண்ணப்பம் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் தங்களால் விண்ணப்பிக்கும் பதவிப்
பெயரினைக் குறிப்பிட்டு பதிவூத் தபாலில் 2019.08.30 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் மேற்குறிப்பிட்ட முகவரியை வந்தடையூமாறு அனுப்பப்படல் வேண்டும். தாமதித்துப் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதுடன் பொலிஸ் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது.
3. சம்பள அளவூத்திட்டம்.- ரூபா 3,93,480.00 – 7 x 4,440 – 2 X 5,940 – 25 X 7,920 – ரூபா 6,34,440.00.
2016.01.01 முதல் 2020.01.01 வரை சம்பளம் பொது நிர்வாக சுற்று நிருபம் இலக்கம் 3/2016 இன் 11 ஆம் அட்டவணையின் பிரகாரம் வழங்கப்படும். மேலும் 2020.01.01 முதல் முழுமையான சம்பள அளவூத்திட்டம்
மேற்குறிப்பிட்டவாறு அமையூம்.
மேலும், இவ்வூத்தியோகத்தர்கள் 2013.01.07 ஆந் திகதிய பொலிஸ் மா அதிபரின் சுற்று நிருப இலக்கம் 2416/ 2013 இன் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவூகளுக்கு உரித்துடையவராவர். மேற்குறிப்பிடப்பட்ட
சம்பளத்திற்கு மேலதிகமாக கீழ்வரும் கொடுப்பனவூகளை மாதந்தோறும் பெறுவதற்கும் உரித்துடையவராவார்
(அ) வாழ்க்கைச் செலவூக் கொடுப்பனவூ : ரூபா 7,800.00
(ஆ) பொ. நி. சு. இல. 03/ 2016 இற்கு அமைய அடிப்படைச் சம்பளத்தில் 40 வீதம் கொடுப்பனவாக குறிப்பிடப்பட்ட பதவிக்கு வழங்கப்படும் ரூபா 11,760.00
(இ) அடிப்படை சம்பளத்தில் 25 வீதம் கொடுப்பனவூ ரூபா 7,350.00
(ஈ) கடினக் கொடுப்பனவூகள் : ரூபா 2,000.00
(உ) ஊக்குவிப்புக் கொடுப்பனவூ ரூபா 800.00
(ஊ) சீருடைகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவூ ரூபா 250.00
(எ) சிவில் ஆடைகளை சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவூ ரூபா 200.00
(ஏ) இணைந்த கொடுப்பனவூகள் : ரூபா 12,000.00 (ஆகக்கூடியது) விசேட கொடுப்பனவூகள் வழங்கும் பிரதேசங்கள்)
(ஐ) இணைந்த கொடுப்பனவூகள் : ரூபா 11,200.00 (ஆகக்கூடியது) விசேட கொடுப்பனவூகள் வழங்காத பிரதேசங்கள்)
இந்தக் கொடுப்பனவூகளுக்கு மேலதிகமாக :
(அ) இலவச போக்குவரத்து வசதிகள்
(ஆ) உத்தியோகத்தர்களுக்கு இலவச மருத்துவ வசதிகள் (வெளிநாடுகளிலும் வைத்திய சிகிச்சைகளைப் பெறுவதற்கு நிதி மூலமான உதவித்தொகைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு) பண உதவிகள் வழங்கப்படும்
(இ) சகல சீருடைகளும் இலவசமாக வழங்கப்படும்
(ஈ) விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வசதிகள்
(உ) கடமைகளுக்கான பிரயாணச் செலவூகளுடன், கடினமான வேலைகளுக்காகவூம் அத்துடன் திறமையான கடமைகளைச் செய்வதற்காகவூம் வெகுமதிகளாகப் பணம் வழங்கப்படும்
(ஊ) தெரிவூ செய்யப்படும் உத்தியோகத்தர்கள் சிவில் உடையணிந்து சேவை செய்ய வேண்டும். அத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளுக்காகவூம் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
04. தேவையான அடிப்படைத் தகைமைகள் :
(அ) வயதெல்லை.- வர்த்தமானி அறிவித்தலின்படி விண்ணப்ப முடிவூத் திகதியில் 18-28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஏற்கனவே இலங்கைப் பொலிஸ் சேவையில் சேவை செய்யூம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விண்ணப்ப முடிவூத் திகதியன்று 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கத்
தகுதியூடையவர்களாவர்.
(ஆ) கல்வித் தகைமைகள்.-
– க.பொ.த. (சா. தர.) பரீட்சையில் கணிதம் மற்றும் தாய்மொழி உட்பட 04 பாடங்களில் திறமைச் சித்திகளுடன்
ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
– க. பொ. த. (உ. தர.) பரீட்சையில் ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
குறிப்பு 1.- இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் வகைப்படுத்தலின்படி பாடங்களின் எண்ணிக்கையை
வகைப்படுத்தும் போது விஞ்ஞான பாட இலக்கங்கள் 41 உம் 44 உம் ஒரு பாடமாகவூம் இல. 42, 45 ஐக் கொண்ட கணித பாடங்கள் ஒரு பாடமாகவூம் கருதப்படும். க. பொ. த. (சா. தர.) பரீட்சையில் சித்தியடைந்த
பாடங்களின் எண்ணிக்கை அதன் பிரகாரம் தீர்மானிக்கப்படும்.
குறிப்பு 2.- க. பொ. த. (சா. தர.) பரீட்சையில் எழுத்துப் பரீட்சையில் தொழில்நுட்பப் பாடத்தில் சித்தியடையாமல் அதே பாடத்தில் செயன்முறைப் பரீட்சையில் சித்தியடைந்திருந்த போதும் அப்பாடத்தில்
சித்தியடையாதவராகக் கருதப்படுவார்.
குறிப்பு 3.- விருப்பத்திற்குரிய தமிழ்/ ஆங்கிலம்/ சிங்களம் ஆகிய பாடங்கள் க. பொ. த. (சா. தர.) பாடத்திட்டத்திற்குள் உள்ளடக்கப்படாமையால் அப்பாடங்களில் சித்திபெறுதல் க. பொ. த. (சா. தர.) பரீட்சையில் சித்தியெய்திய பாடங்களாகக் கருதப்பட மாட்டாது.
(இ) பௌதீகத் தகைமைகள் :
– உயரம் : 05 அடி 06 அங்குலம் (ஆகக் குறைந்தது)
– மார்பு : 32 அங்குலம் ஆகக் குறைந்தது. (மூச்சுவிட்ட நிலையில்)
குறிப்பு 1- சிறந்த விளையாட்டுத் திறமையூடைய தேசிய மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் திறமைகாட்டியூள்ள அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கு பற்றி இலங்கைக்கு புகழ் ஈட்டித்தந்துள்ள
விண்ணப்பதாரர் ஒருவரின் பௌதீக தகைமைகள் சற்று குறைவாக இருப்பினும் அவர் பிற தகைமைகளைப் பூர்த்தி செய்திருப்பின் பொலிஸ் மா அதிபரின் தற்றுணிபின் படி தகைமை பெறுவர்.
(ஈ) பார்வை தொடர்பான தேவை.- ஒவ்வொரு கண்ணிலும் பார்வை 6/12 இற்கு குறைவாக இருத்தலாகாது. ஒரு கண்ணின் பார்வை 6/ 6 ஆகவூம் மற்ற கண்ணின் பார்வை 6/18 ஆகவூம் இருப்பின் ஏற்றுக்கொள்ளப்படும்.
நிறப்பார்வை சாதாரணமாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் ஒருவர் மூக்குக் கண்ணாடி அல்லது பொருத்து வில்லைகள் பாவிப்பவராயின் தகைமை அற்றவராவார்.
(உ) பிற தகைமைகள்.- விண்ணப்பதாரர் திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும் (விவாகரத்துப் பெற்றவர்கள் தகுதியற்றவராக கருதப்படுவர்).
மற்றைய தகைமைகள் உடைய ஏற்கனவே இலங்கை பொலிஸில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இந்நிபந்தனை மாத்திரம் ஏற்புடையதாகாது.
5. ஆட்சேர்ப்பு முறை.-
– விண்ணப்பங்களின் படி தகைமையைப் பெறும் விண்ணப்பதாரர்கள் இலங்கைப் பொலிஸினால் நடாத்தப்படும் அடிப்படைத் தகைமைப் பரீட்சையில் சித்தியெய்தல் வேண்டும். அதில் சித்தியடைந்தவர்கள் மாத்திரம் பின்வரும் உடற் தகுதிப் பரீட்சையில் பங்கு பற்றி அதிலும் சித்தியெய்தல் வேண்டும்.
– உடற் தகுதிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் மாத்திரம் இறுதி நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். நேர்முகப் பரீட்சையில் 40 வீதம் அல்லது அதற்கு மேல் புள்ளிகள் எடுப்பவர்கள் மாத்திரம் இறுதி எழுத்துப்
பரீட்சைக்கு அழைக்கப் படுவர்.
எழுத்துப் பரீட்சை இரு வினாத்தாள்களை உள்ளடக்கியது. அவை :
– 45 நிமிடங்களில் 500 சொற்களுக்குக் குறையாமல் ஒரு விடயம் தொடர்பாக கட்டுரை எழுதுதல்.
– பொது அறிவூம் நுண்ணறிவூம் (01 மணித்தியாலம்)
6. மருத்துவப் பரிசோதனை.- விண்ணப்பதாரர் தனது நியமனத்தை பெற முன்னர் மருத்துவ பரிசோதனையில் சித்தியடைதல் வேண்டும். மருத்துவ பரிசோதனையானது ஆட்சேர்ப்புச் செயற்பாட்டில் ஒரு அங்கம் மட்டுமே ஆகும்.
மருத்துவ பரிசோதனையில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகள் தற்போது உள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கை, முன்னுரிமை மற்றும் அவர்களது திறமை அடிப்படையில் அமைந்த பட்டியலின் படி தெரிவூ செய்யப்படுவர். மருத்துவப் பரிசோதனையில் சித்திபெறாதோர் நிராகரிக்கப்படுவர். மருத்துவ பரிசோதனை பிரதான மருத்துவ உத்தியோகத்தரினால்
உடல்நலம் இல. 169 படிவத்திற்கமைய அறிக்கை தயாரிக்கப்படும் என்பதுடன் மருத்துவ பரிசோதனை ஒரே தடவையில்
நடைபெறும்.
7. பின்னணி விசாரணைகள்.-
(அ) விண்ணப்பதாரரின் நன்நடத்தையூம் அவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் நன்நடத்தைகள் தொடர்பாகவூம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். பாதகமான அறிக்கைகள் உள்ள விண்ணப்பதாரர்கள்
சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள்.
(ஆ) விண்ணப்பதாரர் பொய்யான தகவல்கள் வழங்குவது அவரை ஆட்சேர்ப்பிற்கு தகைமை அற்றதாக்கும். ஆட்சேர்ப்பின் பின்னர் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொய்யானது என வெளிப்பட்டால் சேவையில் இருந்து நீக்கப்படுவர்.
8. அரசகரும மொழித் தேர்ச்சிக் கொள்கையை அமுல்படுத்தல்.-
– பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட 07/2007 என்ற இலக்க 2007.04.28 ஆந் திகதிய சுற்று நிருபத்தின் பிரகாரம் 2007.07.01 ஆந் திகதியிலிருந்து அரசாங்க சேவைக்கு/ மாகாண அரசாங்க சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் தாம் சேவையில் சேர்ந்த
அரச கரும மொழிக்கு மேலதிகமாக மற்றைய அரச கரும மொழிகளிலும் சேவையில் சேர்ந்த திகதியில் இருந்து 05 வருடத்திற்குள் தேர்ச்சி பெறல் வேண்டும்.
– 2007.07.01 ஆந் திகதி தொடக்கம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவி நிலைக்கு கீழே சேர்க்கப்படும் அலுவலர்கள் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் இரண்டாம் மட்ட மொழிப்
பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.
– நியமனத் திகதியில் இருந்து 05 வருடத்திற்குள் இரண்டாம் அரச கரும மொழியில் சித்தியடையாதவர்கள் குறித்த மொழியில் தேர்ச்சி அடையூம் வரை சம்பள ஏற்றங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
9. நியமனக் கொள்கைகள்.- இப்பதவி நிரந்தரமானதும் ஓய்வஷுதியத்திற்கு உட்பட்டதுமாகும். விதவைகள்/ தபுதாரர்/ அநாதைகள் ஓய்வஷுதியத் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு உரித்துடையவர்.
மேலதிக தகவல்கள்