வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவூம் இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆசிரியா்களாக நியமனம் செய்தல் – 2019.01.26
வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவூம் இலங்கை ஆசிரியா் சேவையின் 3 ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சோ்ப்புச் செய்வதற்காக வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் 2018.10.08 ஆம் திகதி கோரப்பட்ட ஆட்சோ்ப்பு விளம்பரத்திற்கு அமைவாக, விண்ணப்பித்தவா்களில் இருந்து தகைமை பெற்றோரில 160 போ் ஆசிரியர் நியமனத்திற்காக தொிவூ செய்யப்பட்டுள்ளனா்.
அத்துடன் 06.08.2018 இல் இருந்து நடைமுறைக்கு
வரும் வகையில் வழங்கப்பட்ட கலைப்பட்டதாரிகளில் காத்திருப்போர் பட்டியலில் இருந்து தொரிவூ செய்யப்பட்டுள்ள 89 பட்டதாரிகள் உள்ளடங்கலாக 249 பட்டதாரிகளுக்கான ஆசிரியா் பதவிக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் எதிர்வரும் 2019.01.26 ஆம் திகதி சனிக் கிழமை காலை 10.00 மணிக்கு யா/வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறவூள்ளது.
எனவே தொிவூ செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரிகள் அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு யா/வேம்படி மகளிர் கல்லூரிக்கு தமது
அடையாளத்தினை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணத்துடன் (தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவூச் சீட்டு) அறிக்கையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
எனவே தொிவூ செய்யப்பட்ட பட்டதாரிகள் பெண்கள் இள வர்ண சாறியூடனும் – முஸ்லிம் பெண்கள் தமக்குரித்தான கலாசார உடைகளுடன் சமுகமளிக்கலாம், ஆண்கள் கறுப்பு வா்ண நீள் காற்சட்டை மற்றும் வெள்ளை நிற சட்டையூம் (சேட்) அணிவதுடன் கழுத்துப் பட்டி அணிதல் வேண்டும்.}
குறித்த திகதியில் தவறாது யா/வேம்படி மகளிர் கல்லூரிக்கு சமுகமளித்து தங்களுக்குரிய நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளா் திரு.சி.சத்தியசீலன் அவா்கள் அறிவித்துள்ளார்
.
பட்டதாரி ஆசிரியார்களாக தொரிவூ செய்யப்பட்ட பாட ரீதியான ஆசிரியா் விபரம் வருமாறு :-
இரசாயனவியல் – 005
பௌதிகவியல் – 004
விஞ்ஞானம் – 100
கணிதம் – 036
ஆங்கிலம் – 015
தமிழ் – 036
வரலாறு – 028
குடியியல் – 022
தகவல் தொழில்நுட்பம் – 003
மொத ;தம் – 249
தெரிவு செய்யப்பட்டோர்
(பட்டியலைப் பெற க்லிக் செய்யவும்)