நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2088/26 ஆம் இலக்கமுடைய 2018.09.11 ஆந் திகதிய அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட
அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவையின் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய
அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய
நீதிமன்ற சுருக்கெழுத்தாளா; தரம் 111 இற்கு ஆட்சேர்த்துக் கொள்ளும் திறந்த போட்டிப்பரீட்சைக்கு தோற்றுவதற்கு
தகைமையூடைய இலங்கையர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இப்பரீட்சையானது நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரினால் கொழும்பில் நடாத்தப்படும். நீதிச் சேவை
ஆணைக்குழுவின் அறிவூறுத்தலுக்கு அமைவாக இப்பரீட்சையினை ஒத்தி வைப்பதற்கான அல்லது செல்லுபடி
யற்றதாக்குவதற்கான அதிகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு உள்ளது.
2. சேவை நிபந்தனைகள்:
2.1 பகிரங்க சேவையின் நியமனத்தை கட்டுப்படுத்தும் பொது நிபந்தனைகளுக்கும்இ இலங்கைச் சனநாயக
சோசலிசக் குடியரசின் 2088/26 ஆம் இலக்க மற்றும் 11.09.2018 ஆந் திகதிய அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தொடர்பிலான பிரமாணக் குறிப்பில் விதிக்கப்பட்டுள்ள நியமங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கும் அப்பிரமாணக்குறிப்பிற்கு
செய்யப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் செய்யப்படவூள்ள திருத்தங்களுக்கும் தாபன விதிக்கோவை மற்றும்
நிதி ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளுக்கு அமைவாக தெரிவூ செய்யப்படும் விண்ணப்பதாரர் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற சுருக்கெழுத்தாளா; தரம் 111 இற்கு நியமிக்கப்படுவார்.
2.2 இந்நியமனமானது மூன்று வருட தகுதிகாண் காலத்தைக் கொண்டதாகும். நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற சுருக்கெழுத்தாளா; தரம் 111 இற்கு ஆட்சேர்த்துக் கொள்ளப்பட்டு 05 வருடங்களுக்குள் வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சையில் சித்தி பெறல் வேண்டும்.
2.3 தமக்கு வழங்கப்பட்ட பதவியின் கடமைகளை உரிய திகதியில் பொறுப்பேற்பதற்குத் தவறும் மற்றும் / அல்லது
நியமனம் பெற்ற பதவியில் அல்லது நியமனம் வழங்கப்பட்ட பிரதேசத்தில் கடமைகளை பொறுப்பேற்பதனை மறுக்கும் அல்லது புறக்கணிக்கும் விண்ணப்பதாரிகளின் நியமனத்தை செல்லுபடியற்றதாக்குவதற்கான அதிகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு அமைவாக உள்ளது.
3. சம்பள அளவூத்திட்டம் : 03/2016 மற்றும் அதற்கு அமைவாக நீதிச் சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட
24.06.2016 ஆந் திகதிய நீதிச்சேவை ஆணைக்குழுவின் 386ஆம் இலக்க சுற்றுநிருபத்திற்கு அமைவாக,
அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய
நீதிமன்ற சுருக்கெழுத்தாளா; தரம் 111 இற்குரிய ரூ. 28940 – 10 x 300 – 11 x 350 – 10 x 560 – 10 x 660 – ரூபா 47990 (ஆரம்ப சம்பளம் ரூபா 28940) ஆவதுடன் அச்சம்பளம் 01.01.2020 ஆந் திகதி தொடக்கம் உரித்தாகும். மேற்குறிப்பிட்ட சுற்றுநிருபத்தின் அட்டவணை 11 இன் ஏற்பாடுகளுக்கு அமைவாக நியமனம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்து சம்பளம் வழங்கப்படும்.
5. தகைமைகள்.
அட்டவணைப்படுத்தப்பட்ட பகிரங்க உத்தியோகத்தர் சேவைக்குரிய நீதிமன்ற முகாமைத்துவ உதவிச்சேவையின்
நீதிமன்ற சுருக்கெழுத்தாளா; தரம் ஐஐஐ இற்குரிய பதவிக்கு ஆட்சேர்த்துக்கொள்வதற்கு கீழ்வரும் தகைமைகளைப்
பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
(அ) இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
(ஆ) விண்ணப்பப்படிவங்களை பொறுப்பேற்கும் இறுதித் திகதிக்கு 18 வயதிற்கு குறையாமலும் 35 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
(இ) நன்நடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்.
(ஈ) அட்டவணைப்படுத்தப்பட்ட பகிரங்க சேவைக்கு ஆட்சேர்த்துக் கொள்ளப்படும் சகல விண்ணப்பதாரர்களும்
இலங்கையின் எப்பாகத்திலும் சேவையாற்றுவதற்கும், பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கும்
சிறந்த உடல், உள ஆரோக்கியம் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
(உ) கீழ்வரும் கல்வித்தகைமைகளை புஷுர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
1. சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கில மொழி உட்பட நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஒரே அமர்வில் கணிதம் உட்பட ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத்தராதரப்
பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். (நீதிமன்ற சுருக்கெழுத்தாளா் (சிங்களம்) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் சிங்களத்திலும், நீதிமன்ற
சுருக்கெழுத்தாளர் (தமிழ்) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் தமிழ் மொழியிலும்,
நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் (ஆங்கிலம்) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் ஆங்கில
மொழியிலும் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டு;ம்.)
மற்றும்
11. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை, தொழில்நுட்ப கல்லூரி அல்லது அரச பதிவூடைய பயிற்சியளிக்கும் நிறுவனமொன்றில்
சுருக்கெழுத்து மற்றும் தட்டெழுத்து பாடநெறியினை சிறந்த முறையில் பயின்று அதில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு – சகல விண்ணப்பதாரிகளும் பதவிக்குரிய சகல தகைமைகளையூம் 2019 சனவரி 11 ஆந் திகதி
அல்லது அதற்கு முதல் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
6. பரீட்சை நடபடிமுறைகள்.
(அ) இப்பரீட்சை சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் நடைபெறும். விண்ணப்பதாரிகள் தமக்குரிய ஒரு
மொழியை மாத்திரம் தெரிவூ செய்ய வேண்டியதுடன் பரீட்சைக்குரிய சகல வினாப்பத்திரங்களுக்கும்
அம்மொழி மூலமே விடையளிக்க வேண்டும். விண்ணப்பித்த மொழியை பின்னா; மாற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
இப்பரீட்சையானது மூன்று (03) வினாப்பத்திரங்களைக் கொண்டதாகும்.
வினாப்பத்திரம் மொத்தப் புள்ளிகள் சித்தியடைய பெற
வேண்டிய புள்ளிகள்
01. மொழித்திறன் 100 40
02. உளச்சார்பு 100 40
03. சுருக்கெழுத்து மற்றும் தட்டெழுத்து 100 ழூ
(ழூ வெற்றிடங்களின் எண்ணக்கையினை கருத்திற் கொண்டு சுருக்கெழுத்து மற்றும் தட்டெழுத்து பரீட்சையில்
சித்தியடைய தேவையான புள்ளி மட்டமானது நீதிச் சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும்.)
பரீட்சைக்கான பாடத்திட்டம்.
1. மொழித் திறன் :-
இவ்வினாப்பத்திரம் விண்ணப்பதாரிகளின் கருத்து தெரிவித்தல், கிரகித்தல், எழுத்தறிவூ, மொழி
மற்றும் கட்டுரை, கடிதம் ஒன்றுக்கான பரும்படியைத் தயாரித்தல், வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாக வரைபுகள் மற்றும் அட்டவணைகள் தயாரித்தல், சுருக்கம் எழுதுதல், தரப்பட்டுள்ள
வாக்கியங்கள் சிலவற்றின் கருத்தை தனி வாக்கியத்தில் எழுதுதல் மற்றும் எளிய இலக்கண பயன்பாடு தொடர்பிலான அறிவைப் பரீட்சிக்கும் விடயரீதியான வினாக்களைக் கொண்டதாகும்.
2. உளச்சார்பு :-
இவ்வினாப்பத்திரமானது விண்ணப்பதாரிகளின் எண் சாh;ந்த திறன், தர்கிக்கும் ஆற்றல், பொது அறிவூ என்பவற்றை அளவிடும் வகையிலான விடயப்பரப்பிற்குரிய வினாக்களைக் கொண்டதாக
அமையூம்.
3. சுருக்கெழுத்து மற்றும் தட்டெழுத்து
(சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்)
சுருக்கெழுத்து (சிங்களம்)
நிமிடத்திற்கு 70 சொற்கள் எனும் ஆகக்குறைந்த வேகத்தில் 05 நிமிடங்களுக்குள் வாசிக்கப்படும்
பந்தியொன்றினை சுருக்கெழுத்து செய்து அதனை நிமிடத்திற்கு 07 சொற்கள் என்ற வேகத்தில் பிரதியாக்கல்
வேண்டும். தட்டச்சு (சிங்களம்) தரப்படும் 500 சொற்கள் கொண்ட பந்தியினை நிமிடத்திற்கு 25 சொற்கள் என்ற வேகத்தில் தட்டச்சு
செய்தல் வேண்டும்.
சுருக்கெழுத்து (தமிழ்) நிமிடத்திற்கு 70 சொற்கள் எனும் ஆகக்குறைந்த வேகத்தில் 05 நிமிடங்களுக்குள் வாசிக்கப்படும்
பந்தியொன்றினை சுருக்கெழுத்து செய்து அதனை நிமிடத்திற்கு 07 சொற்கள் என்ற வேகத்தில் பிரதியாக்கல் வேண்டும்.
தட்டச்சு (தமிழ்) தரப்படும் 500 சொற்கள் கொண்ட பந்தியினை நிமிடத்திற்கு 25 சொற்கள் என்ற வேகத்தில் தட்டச்சு
செய்தல் வேண்டும்.
சுருக்கெழுத்து (ஆங்கிலம்) நிமிடத்திற்கு 80 சொற்கள் என்ற ஆகக்குறைந்த வேகத்தில் 05 நிமிடங்களுக்குள் வாசிக்கப்படும்
பந்தியொன்றை சுருக்கெழுத்து செய்து அதனை நிமிடத்திற்கு 08 சொற்கள் என்ற வேகத்தில் பிரதியாக்கல் வேண்டும்.
தட்டச்சு (ஆங்கிலம்)
தரப்படும் 600 சொற்கள் கொண்ட பந்தியொன்றை நிமிடத்திற்கு 30 சொற்கள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்தல்.
குறிப்பு : தௌpவற்ற கையெழுத்தைக் கொண்ட விடைப்பத்திரங்களுக்கான புள்ளிகள் குறைக்கப்படும்.
இவ்வினாப்பத்திரங்கள் பல்தேர்வூ வினாக்கள்இ சுருக்க வினாக்கள்இ கட்டமைப்பு ரீதியான கட்டுரை
வினாக்கள்இ கட்டுரை வினாக்களைக் கொண்டவையாகும்.
(சுருக்கெழுத்து மற்றும் தட்டெழுத்து பரீட்சைக்காக தாம் விண்ணப்பிக்கும் பிரிவிற்குரிய வினாப்பத்திரத்தை
தெரிவூ செய்தல் வேண்டும். கடமை நிமித்தம் விண்ணப்பதாரிக்குள்ள தகைமைகள் மற்றும் திறன்களை
பரீட்சிக்கும் நோக்கில் இவ்வினாப்பத்திரம் தயாரிக்கப்படும்.)
விண்ணப்ப முடிவுத் திகதி 11.02.2019
மேலதிக விபரங்கள்