தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் விபரங்கள் நாளை வர்த்தமாணியில் வௌியாகாது என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தமானி பிரசுரத்திற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் இறுதி நேர மாற்றங்கள் சில மேற்கொள்ள வேண்டிய தேவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால் மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் அடுத்த வாரங்களில் விரைவாக வர்த்தமானியை வௌியிட முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.