பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 3850 பேருக்கான நியமனத்துக்கான அமைச்சரவை அங்கீகரித்த முறைமை இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமானக் குறிப்பினை மீறும் வகையில் அமைந்துள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கம் போர்க்கொடி பிடித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்நியமனத்திற்கான அனுமதி ஆசிரியர் சேவை பிரமானக் குறிப்பின் படி நடக்க வேண்டும் என்றும் அவ்வாறு நடைபெறாத போது நீதி மன்றத்தை நாடவேண்டிவரும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
1885/38 இலக்கமுடைய ஆசிரியர் சேவை யாப்பின் படி விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்ற பதவி இல்லை என்பதனால் விளையாட்டு மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களே நியமிக்கப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நியமனம் ஆசிரியர் சேவைக்கே சவாலுக்குரியது என்று தெரிவித்துள்ள அவர்
உடனடியாக இந்நியமனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.