பின்வரும் நாடளாவிய சேவைகளின் தரம் 111 பதவிகளில் நிலவூம் வெற்றிடங்களுக்குத் திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்குத் தகைமையூடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
– இலங்கை நிர்வாக சேவை
– இலங்கை கணக்காளர் சேவை
– இலங்கை திட்டமிடல் சேவை
– இலங்கை கல்வி நிர்வாக சேவை
– இலங்கை விஞ்ஞான சேவை
எழுத்துமூலப் பரீட்சை :-
இப் போட்டிப் பரீட்சையானது பின்வருமாறு இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். அதன்
முதற் பகுதியானது (பொதுப் பகுதி) அனைத்து சேவைகளுக்கும் ஏற்புடையதாகும். முதலாம் பகுதியில் ஒவ்வொரு
வினாப்பத்திரத்திற்கும் 40 வீதம் அல்லது அதனிலும் கூடிய மற்றும் இரண்டு வினாப்பத்திரங்களினதும் மொத்தப்புள்ளிகளின் கூட்டுத்தொகை 100 அல்லது அதனிலும் கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளும் விண்ணப்பதாரிகள் மாத்திரம் இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கைத் திட்டமிடல் சேவை மற்றும் இலங்கைகல்வி நிர்வாக சேவை போன்ற சேவைகளுக்குரிய பரீட்சையின் இரண்டாம் பகுதிக்கு அழைக்கப்படுவர்
– பரீட்சையின் முதலாம் பகுதி மாத்திரம் இலங்கை விஞ்ஞான சேவைக்கு ஏற்புடையதாகும்.