மாணவர்களிடம் உறுதிமொழி சான்றிதழைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கமாட்டோம் என்றும் பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தை ஏற்படுத்தமாட்டோம் என்றும் உறுதிமொழி சான்றிதழில் கையொப்பம் பெறுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உயர்தரத்தில் சித்தியடைந்ததன் பின்னர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பு குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது ஒரு சுமூக உடன்படிக்கை என்றும், அந்த ஒப்பந்தத்தை மீறும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களின் மாணவர் தகைமை ரத்துச் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழகத்தில் சேரும் ஒரு மாணவ மாணவிக்காக ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் செலவழிப்பதாகவும், அதன்படி 4 ஆண்டுகள் படித்து விட்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்காக 4 ஆண்டுகளில் 32 லட்சம் ரூபாய் என்ற பெரும் தொகையை அரசு செலவழிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
மாணவர்களிடமிருந்து இவ்வாறான உறுதிமொழிப் படிவம் பெறுவது இதுவரை நடக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் மோதல்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
විශ්වවිද්යාලවලට තේරෙන සිසු සිසුවියන්ගෙන් පොරොන්දු සහතිකයක් ලබාගෙන ඔවුන් විශ්වවිද්යාලවලට ඇතුළත් කර ගැනීමේ නව වැඩපිළිවෙළක් ආරම්භ කරන බව උසස් අධ්යාපන රාජ්ය අමාත්ය සුරේන් රාඝවන් පැවැසීය.
විශ්වවිද්යාල දේපළවලට හානි නොකරන බවට හා විශ්වවිද්යාල පරිශ්රය තුළ කලහකාරී සිද්ධි ඇති කර නොගන්නා බවට සඳහන් පොරොන්දු සහතිකයකට එසේ අස්සන් ලබාගන්නා බව ද අමාත්යවරයා ප්රකාශ කළේ ය.
උසස් පෙළ සමත්ව විශ්වවිද්යාලයකට ඇතුළු වීමට දැරිය යුතු කැපකිරීම හා එසේ දිනාගත් අයිතියේ වගකීම පිළිබඳව එම පොරොන්දු සහතිකය මගින් සිසු සිසුවියන් දැනුවත් කිරීමට පියවර ගන්නා බව ද ඔහු සඳහන් කළේ ය.
මෙය සමාජ සම්මුතියක් බව ද එම සම්මුතිය බිඳදමන සිසු සිසුවියන්ට එරෙහිව නීතිමය පියවර ගෙන ඔවුන්ගේ ශිෂ්යභාවය අහෝසි කිරීමට කටයුතු කරන බව ද ඔහු ප්රකාශ කළේ ය.
විශ්වවිද්යාලවලට ඇතුළත් වන එක් සිසුවෙකු සිසුවියක වෙනුවෙන් වසරකට රුපියල් ලක්ෂ 8ක් වැය කරන බව ද ඒ අනුව වසර 4ක අධ්යාපනය ලබා විශ්වවිද්යාලයෙන් පිටව යන සිසුන් වෙනුවෙන් වසර 4ට රුපියල් ලක්ෂ 32ක් වැනි විශාල මුදලක් වැය කිරීමට රජයට සිදුව ඇති බව ද ඔහු පැවසීය.
සිසු සිසුවියන්ගෙන් මෙවැනි පොරොන්දු පත්රයක් ලබා ගැනීම මෙතෙක් සිදුව නොමැති බවද ඔහු වැඩිදුරට ත් සඳහන් කළේ ය.
විශ්වවිද්යාල තුළ ඇති වන ගැටුම් වැළැක්වීම සඳහා ගෙන ඇති පියවර කවරේ දැයි විමසුමකට පිළිතුරු ලබා දෙමින් රාජ්ය අමාත්යවරයා මේ බව පැවසීය.