புதிய தவணை மார்ச் 24 இல் ஆரம்பம். குறைவான விடுமுறைகளுடன் அதிக கல்விப்பணி
2023 ஆம் ஆண்டின் பாடசாலைகளுக்கான கல்வியாண்டு அடுத்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகளுக்கான பருவ பரீட்சைகளை நடத்துவதில்லை என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கு பதிலாக, மாணவர்கள் தங்கள் படைப்பு திறன்களை மதிப்பிடுவதற்கு உடற்பயிற்சி சார்ந்த செயல்பாடுகளை எதிர்கொள்ளவுள்ளனர்.
க.பொ.த (சா/த) பரீட்சைக்குப் பின்னர் மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப அரச தொழில்நுட்பக் கல்லூரிகளிலோ அல்லது அரச பல்கலைக்கழக கல்வியிலோ தொழில் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிற்பயிற்சி நெறிகளிலோ சேர ஊக்குவிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் .
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் மாணவர்களின் தாமதமான அல்லது தவறவிட்ட கல்விச் செயல்பாடுகளை முன்னெடுக்க குறைவான விடுமுறைகளும் அதிக கல்விப் பணிகளும் வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள 7,900 பின்தங்கிய பகுதி பாடசாலைகளைச் சேர்ந்த ஒரு மில்லியன் மாணவர்களுக்கு இலவச சீருடைப் பொருட்கள், இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் இலவச மதிய உணவும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
අඩු නිවාඩු සමඟ වැඩි අධ්යයන කටයුතු
2023 වසරේ පාසල් වර්ෂය මාර්තු 24 වැනිදා ආරම්භ වන අතර රට පුරා පිහිටි රජයේ පාසල්වල ප්රාථමික පන්ති සඳහා වාර විභාග නොපැවැත්වීමට අධ්යාපන අමාත්යාංශය තීරණය කර තිබේ. ඒ වෙනුවට, සිසුන් ඔවුන්ගේ නිර්මාණාත්මක හැකියාවන් තක්සේරු කිරීම සඳහා ව්යායාම පදනම් වූ ක්රියාකාරකම් වලට මුහුණ දෙනු ඇත.
සාමාන්ය පෙළ විභාගයෙන් පසු සිසුන් ඔවුන්ගේ පුද්ගලික තේරීම අනුව රජයේ කාර්මික විද්යාලවලට හෝ රජයේ විශ්වවිද්යාල අධ්යාපනයට හෝ වෘත්තීයමය වශයෙන් පිළිගත් වෘත්තීය පුහුණු පාඨමාලාවලට ඇතුළත් වීමට ඔවුන් දිරිමත් කරන බව අධ්යාපන ඇමැති සුසිල් ප්රේමජයන්ත මහතා පැවසීය.
ලබන වසරේ දෙසැම්බර් මාසය වන විට සිසුන්ගේ ප්රමාද වූ හෝ මඟ හැරුණු අධ්යයන ක්රියාකාරකම් සොයා ගැනීමට අඩු නිවාඩු සහ වැඩි අධ්යයන කටයුතු ලබා දෙනු ඇත.
ලබන වසරේ දිවයින පුරා පිහිටි පසුගාමී පාසල් 7,900 ක සිසුන් දස ලක්ෂයකට නොමිලේ නිල ඇඳුම්, නොමිලේ පෙළපොත් සහ දිවා ආහාරය නොමිලේ ලබාදෙන බව ද අමාත්යවරයා පැවසීය.