விளையாட்டுக்காக
பாடசாலை மாணவர்களுக்கு
மேலதிக இரண்டு மணி நேரம்..!
பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டுக்காக மேலதிகமாக இரண்டு மணித்தியாலங்களை ஒதுக்குவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முன்மொழிவு விளையாட்டு மேம்பாட்டுக்காக தயாரிக்கப்படும் தேசிய திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி இரண்டு மணித்தியாலங்கள் விளையாட்டுக்காக ஒதுக்க பிரேரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றதுடன், அக்கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அமைச்சர், கல்வி அமைச்சர் மற்றும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பிக்க அமைச்சர் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.