கல்வி அமைச்சு
ஆங்கிலப் பாடத்துடன், பொதுக் கலை (வெளிவாரி) பரீட்சை கலைமாணி (வெளிவாரி) முதல் பரீட்சை மற்றும் விஞ்ஞானமாணி (வெளிவாரி) முதல் பரீட்சை சித்தியடைந்த ஆசிரியர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதித்தல் – கல்வியாண்டு 2021/2022
ஒவ்வொரு வருடமும் மேற்கூறிய பரீட்சையில் சித்தியடைந்த ஆசிரியர்களின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் பல்கலைக்கழககங்களுக்கு கலை, உயிரியல் விஞ்ஞானம், பெளதீக விஞ்ஞானம் மற்றும் பிரயோக விஞ்ஞானம் முதலான முதல் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு உள்ளீர்க்கப்படுகின்றனர்.
அதனை அடிப்படையாகக் கொண்டு 2021-2022 கல்வியாண்டிலும் ஆசிரியர்களை உள்ளீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சேவை செய்யும் கீழ் வரும் வகைக்குள் அடங்கும் ஆசிரியர்களில் குறிப்பிட்ட தகைமையைப் பெற்றுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்ப முடிவுத் திகதி 06.12.2022 ஆகும்
- 2017 ஆம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர், ஆங்கில பாடத்துடன் பொதுக் கலைத் (வெளிவாரி) தேர்வு அல்லது கலைமாணி (வெளிவாரி) முதல் பரீட்சை சித்தியடைந்த ஆசிரியர்கள் ( கலைத் துறைப் பாடங்களுக்கு விண்ணப்பிக்க தகைமை பெறுவர்)
- 2017 ஆம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர், விஞ்ஞானமாணி (வெளிவாரி) பட்டத்துக்கான முதல் பரீட்சை சித்திபெற்றவர்கள் (உயிரியல், பெளதீகவியல், பிரயோக விஞ்ஞான பாநெறிக்கு விண்ணப்பிக்க தகைமை பெறுவர்)
பின்வரும் தகைமைகளையும் கொண்டிருக்க வேண்டும்
- விண்ணப்ப முடிவுத் திகதியன்று ஆசிரியராக ஐந்து வருட காலத்தை பூரணப்படுத்தல்
- தேர்வு செய்யப்படும் போது பயிற்சிக் கல்லூரி, தேசிய கல்வியியல் கல்லூரி மாணவராக பதிவு செய்யாதிருத்தல்
- ஏதேனும் பல்கலைக்கழகமொன்றில் நடைபெறும் உயிரியல் விஞ்ஞானம், பெளதீக விஞ்ஞானம் அல்லது பிரயோக விஞ்ஞானம் ஆகிய பாடநெறிகளுடன் சம்பந்தப்பட்டு. குறிப்பிட்ட பாடநெறிக்கு தகைமை பெறுவதற்காக க.பொ.த உயர் தரப் பரீட்சையில் அல்லது விஞ்ஞானமாணி (வெளிவாரி) முதல் பரீட்சையில் அல்லது குறித்த பல்கலைக்கழகத்தின் ஊடாக முன் தேவையாக குறிப்பிடப்பட்ட பாடத்தில் திறமைச் சித்தி பெற்றிருத்தல்
ஆங்கில பாடத்துடனானவர்களுக்கே இந்த விசேட அனுமதி வழங்கப்படுகிறது.
இந்தப் பாடநெறிக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்களுக்கு கற்றல் விடுமுறை வழங்கப்படும் என்பதால் கற்றல் விடுமுறை பெறுவதற்கு தகைமை பெற்றர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கவும்.
மாதிரி விண்ணப்பம் இணைக்கப்பட்டுள்ளது.