பாடசாலை மாணவர்களுக்கு பாராளுமன்றத்தினைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்குகல்
மேற்படி விடயத்திற்குரியதாக இலங்கைப் பாராளுமன்றத்தின் வேத்திரதாரி, கல்விச் செயலாளருக்கு
அனுப்பிவைத்துள்ள இலக்கம் 5A/A/12 மற்றும் 2022,11.03
திகதியுடைய கடிதத்துடன் தொடர்புடையது.
பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றத்தினைப் பார்வையிடுவதற்கு அனுமதி கோரி கிடைக்கப்பெறும் அதிகளவிலான கோரிக்கைகள் காரணமாக குறித்த அனுமதி வழங்கும் செயன்முறையினை முறைமைப்படுத்துவதற்கு இவங்கை பாராளுமன்ற வேத்திரதாரி இணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஆகையால் அதற்குரிய விடயங்கள் தொடர்பாக பாடசாலை அதிபர்களை அறியப்படுத்துமாறு அக்கடிதத்தினூடாக கோரப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கைப் பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கான அனுமதிப் படிவம் வழங்குதல், அதற்குரிய அனுமதி வழங்குவதர்குரிய கால எல்லைகள். அதன் போது பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகள் போன்றன தொடர்பாக அத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைப் படிவம் (இணைப்பு 01) மற்றும் அனுமதி பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்க வேண்டிய மாதிரி விண்ணப்பப் படிவம் (இணைப்பு 02) ஆகியன இத்துடன் தங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இது தொடர்பாக தங்களது வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலை அதிபர்களையும் அறியப்படுத்துமாறும் தெரிவித்துக் கொள்வதுடன் பாடசாலை சுற்றுப் பயணங்களுக்கு அனுமதி வழங்கும் போது குறித்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்துமாறும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
விபரங்கள்