ඒකාබද්ධ සේවයේ නිලධාරීන්ගේ වාර්ෂික ස්ථාන මාරු -2023
දැනුවත් කිරීමේ ලිපිය මෙතැනින් බාගත කරගන්න
Annual Transfer of Combined Service Officers 2023
அனைத்து இணைந்த சேவைகள் அதிகாரிகளினதும் வருடாந்த இடமாற்றம் 2023
அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 02/2022 சுற்றுநிருபத்திற்கமைய கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகள்,ஆசிரயிர் கலாசாலைகள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் வலயக் கல்விப் பணிமனைகளில் கடமையாற்றும் இணைந்த சேவை உத்தியோகத்தர்களது இடமாற்ற விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
2022.12.31 ஆம் திகதியன்று ஐந்து வருட சேவையை ஒரு நிலையத்தில் பூர்த்தி செய்த ஊழியர்கள் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை நிகழ்நிலையில் சமர்ப்பித்துவிட்டு அதன் வன்பிரதியை நிறுவனத்தலைவரின் உறுதிப்படுத்தலோடு பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சு வேண்டியுள்ளது.
E Mail – [email protected]
கோரிக்கை அடிப்படையில் இடம்பெறும் இடமாற்றத்தை அதன் பின்னர், எந்தக் கோரிக்கை அடிப்படையிலும் இடைநிறுத்த முடியாது என்பதோடு, விசேட பயிற்சி பெற்ற ஊழியரை இடமாற்றாது மேலும் ஒரு வருடத்திற்கு திணைக்களத்தில் வைத்திருக்க தலைமை அதிகாரி விரும்பினால் அது தொடர்பாக விண்ணப்பத்தின் போது தெரிவிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Annual Transfers of Officers in Combined Services 2023 – Circular