கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் ஊடாக பொதுக் கல்வி முறையில் தகவல் தொழிநுட்பத்தை பிரதான கட்டாயப் பாடமாக உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நனோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் பாடப் பிரிவுகளுடன் தகவல் தொழில்நுட்பத்தையும் கலந்து மாணவர்களுக்கு அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கான வழியை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்..
தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் இடம்பெற்ற போதே அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அறிவில் முன்னிலையில் உள்ள போதிலும், அந்த அறிவை நடைமுறையில் பயன்படுத்தும் செயற்பாடுத்திட்டம் இலங்கைக்கு இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
අධ්යාපන ප්රතිසංස්කරණ ක්රියාවලිය හරහා තොරතුරු තාක්ෂණය සාමාන්ය පෙළ හර විෂයක් ලෙස ඉදිරියේ දී එක් කිරීමට පියවර ගන්නා බව අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත් මහතා පවසයි.
මීට සමගාමීව නැනෝ තාක්ෂණය, ජෛව තාක්ෂණය, ‘රොබෝටික්ස්’, කෘත්රීම බුද්ධිය වැනි නැගී එන විෂය ධාරා සමග තොරතුරු තාක්ෂණය මුසු කර සිසුන් දැනුමෙන් මෙන් ම තාක්ෂණයෙන් ද සන්නද්ධ කිරීම මගින් අනාගත අභියෝග ජයගැනීමේ මාවත සකස් කිරීමට පියවර ගත යුතු බව ද අමාත්යවරයා පෙන්වා දෙයි.
තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ ශුරයෝ තරගාවලියේ ජයග්රහකයින්ට ත්යාග හා සහතික පත්ර ප්රදානය කිරිම වෙනුවෙන් අධ්යාපන අමාත්යංශයේ පැවැති උත්සවයට සහභාගී වෙමින් සුසිල් ප්රේමජයන්ත අමාත්යවරයා මේ බව කියා සිටියේය.
සෙසු රටවලට සාපේක්ෂව දැනුම අතින් ඉදිරියෙන් සිටිය ද එම දැනුම ප්රායෝගිකව භාවිත කිරීමේ ක්රියාදාමයක් ශ්රී ලංකාවට නොමැති බව අමාත්යවරයා එහිදි පෙන්වාදුන්නේය.