அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சை
1. அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
2. விண்ணப்ப முடிவுத் திகதி 2023.02.10. பரீட்சை மார்ச் மாதமளவில் நடைபெறும்
3. பரீட்சையில் ஒவ்வொரு வினாப் பத்திரத்திரத்திலும் 40 புள்ளிகளுக்கு குறையாத புள்ளிகள் பெற்றவர்களது முழு புள்ளிகளைக் கூட்டி, அதனை நிரற்படுத்தி நேர்முகப்பரீட்சைக்கான பட்டியல் தயாரிக்கப்படும். அடிப்படைத் தகைமை இல்லாதவர்கள் நீக்கப்பட்டு, அதன் பின்னர் பிரயோக நேர்முகத் தேர்வு நடைபெறும்
4. பிரயோகப் பரீட்சையிலும் எழுத்துப் பரீட்சையிலும் பெற்ற புள்ளிகளின் கூட்டுத்தொகை ஒழுங்குபடுத்தப்பட்டு விண்ணபித்துள்ள மொழி, பாடம், பாடசாலை வகை அடிப்படையில் வெற்றிடங்களுக்கு ஏற்ப நியமனம் வழங்கப்படும்.
5. நியமனம் பெறுபவர்களுக்கு 5 வருடங்கள் வரையில் இடமாற்றம் வழங்கப்படமாட்டாது
6. நியமனங்கள் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகள் அடிப்படையில் வெவ்வேறாக வழங்கப்படும். இரண்டு வகைக்கும் அல்லது ஏதாவது ஒரு வகைக்கு விண்ணப்பிக்க முடியும்.
7. கிழக்கு மாகாணத்தில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டிராது, கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கான வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது, விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தகவல் தொழிநுட்பம், தொழிநுட்ப துறைப் பாடங்கள் மற்றும் உளவளத்துணை ஆகிய பாடங்களுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
8. மூன்று வருடம் தகுதிகாண் காலமாகும். அது வரை தற்போதுள்ள சம்பளமே வழங்கப்படும்.
9. விண்ணப்பிக்கும் பாடத்திற்கு ஏற்ப பிரதான பாடத்தைக் கொண்ட பட்டம் இல்லாத போது மேலதிக தகைமைகளும் கருத்திற் கொள்ளப்படும்
10.பட்டத்தின் Transcript மற்றும் Credit என்பன பெறுபேற்றில் விபரமாக குறிப்பிடப்படாவிட்டால், இவை இரண்டையும் பல்கலைக்கழகத்தினூடாக உறுதிப்படுத்தி, நேர்முகப்பரீட்சையின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
11. உயர் தரத்தின் 13 வருட உறுதிப்படுத்தப்பட்ட பாடங்களுக்கும் சாதாரண தரத்தின் பாடங்களுக்குமாக இரண்டு பாடத்தொகுதிகளுக்கு வெவ்வேறாகவும் விண்ப்பிக்க முடியும்.
12. க.பொ.த சாதாரண தரத்தில் கட்டாயமாக சிங்கள் மொழி அல்லது தமிழ் மொழி சித்தியடைந்திருக்க வேண்டும்.
13. விண்ணப்ப முடிவுத்திகதியன்று 40 வயதுக்கு மேற்படாதிருக்க வேண்டும்.