உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பில் பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் விசேட வேண்டுகோள்
2022 ஆம் வருட உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்துள்ள இந்நிலையில் போதுமானளவு விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்காததன் காரணமாக மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிப்பது தாமதமாகியுள்ளது.
மதிப்பீட்டாளர்களின் கொடுப்பனவு போதாத்தன் காரணமாக அநேகமாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அமைச்சரவை அனுமதியுடன் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோருக்கு நாளாந்தம் குறைந்த பட்சம் 2000 ரூபா கொடுப்பணவு வழங்க நிறுவன பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் வாழ்க்கையின் முக்கிய நிலையான இப்பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு மதிப்பீட்டு பணிகளை மேலும் தாமதிக்காமல் ஆரம்பிக்க பூரண ஒத்துழைப்ப்பை தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்