கலைமாணி (பொது) வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் – 2020/2021
தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிக்கள் மற்றும் தொழில்சார் கற்கைககள் நிலையத்தினால் கலைமாணி (பொது) வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு மாணவர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள்
தகைமை – க.பொ.த உயர் தரத்தில் ஒரே அமர்வில் அங்கீகரிப்பட்ட மூன்று பாடங்களில் (2020 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்திய பரீட்சை) ஆகக் குறைந்த சித்திகளுடன் பொதுச் சாதாரண தரப் பரீட்சையில் ஆகக் குறைந்தது 30 வீதப் புள்ளிகள் பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணிதம், தமிழ் உட்பட ஆறு பாடங்களில் இரண்டு அமர்வுக்கு மேற்படாத வகையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
கட்டணம் – 120 000.00 ரூபா
மொழி மூலம் – முதலாம் வருடம் தமிழ் மொழியிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்கள் தமிழ் ஆங்கில மொழிகளிலும் நடைபெறும்
தெரிவு செய்யப்படும் முறை – நேர்முகப் பரீட்சை மற்றும் நுழைவுப் பரீட்சை
விண்ணப்பிக்கும் முறை –
விண்ணப்பத்தினை செயற்படுத்துவதற்கான கட்டணமாக ரூபா 1500.00 ரூபா ஐ செலுத்த வேண்டும். இக்கடணத்தினை பல்கலைக்கழத்தினால் வழங்கப்படுகின்ற பற்றுச் சீட்டினை பூரணப்படுத்தி எந்தவொரு மக்கள் வஙகிக் கிழையிலும் செலுத்த முடியும். மேலும் விண்ணப்பதாரிகள் பல்கலைக்கழக இணையத்தளத்திலுள்ள நிகழ்நிலை விண்ணப்ப படிவத்த்தை பூர்த்தி செய்து அனுப்புவதோடு அதன் பதிவிறக்கம் செய்யப்பட்ட அச்சுப் பிரதிணை அறிவுறுத்தல்களுக்கு அமைய முறைப்படி ஒப்பமிட்டு பிரதி பதிவாளர், வெளிவாரி பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகளுக்கான நிலையம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் என்ற முகவரிக்கு கிடைக்கக் கூடியதாக அனுப்புதல் வேண்டும்
விண்ணப்பத்தை அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் கலைமாணி (பொது) வெளிவாரிப் பட்டப்படிப்பு -2020 2021 எனக் குறிப்பிடுதல் வேண்டும்.