டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) உயர்தரப் பரீட்சை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் பரீட்சை நடக்கவுள்ளது. இதன்படி யாரேனும் விண்ணப்பிக்க இருந்தால் அவர்களுக்கு 3 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான கால அட்டவணை அடுத்த வாரமளவில் வெளியிடப்படும்.
இதேவேளை பாடசாலை விடுமுறை இம்முறை டிசம்பர் 22ஆம் திகதியளவில் வழங்கப்படலாம். ஆரம்ப பிரிவுகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். பரீட்சை முடிவடைந்த பின்னர் மற்றைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படலாம். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும்” என்றார்
දෙසැම්බර් පාසල් නිවාඩුවේ වෙනසක් සිදු කරන බව අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත මහතා පවසයි.
අමාත්යවරයා මේ බව පැවසුවේ බ්රහස්පතින්දා (05) පාර්ලිමේන්තුවේදී උසස් පෙළ විභාගය පිළිබඳ අදහස් ඉදිරිපත් කරමින්.
උසස් පෙළ විභාගය ජනවාරි මාසයේ පැවැත්වෙන බැවින් දෙසැම්බර් පාසල් නිවාඩු කාලය වෙනස් කර ඇත. මේ අනුව දෙසැම්බර් 22 වැනිදා සිට පාසල් වාර නිවාඩුව ආරම්භ වේ.
විභාගය ජනවාරි 4 සිට ජනවාරි 31 දක්වා පැවැත්වේ. මේ අනුව යමෙකුට අයදුම් කිරීමට අවශ්ය නම් දින 3 ක කාලයක් ලබා දී ඇත. විභාග කාලසටහන ලබන සතියේ ප්රකාශයට පත් කෙරේ.
මේ අතර මෙවර දෙසැම්බර් 22 වැනිදා පාසල් නිවාඩු ලබාදිය හැකියි. ප්රාථමික පාසල් ජනවාරි 2 වැනිදා ආරම්භ වේ. විභාගය අවසන් වූ පසු සෙසු පාසල් ආරම්භ කළ හැකිය. මේ සම්බන්ධයෙන් අධ්යාපන අමාත්යාංශයෙන් නිල නිවේදනයක් නිකුත් කරනවා,” ඔහු පැවසීය