நாளை பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து என்பவற்றில் கவனம் செலுத்தி பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக அவசர தீர்மானம் எடுக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!
தற்போது நாடு முழுவதும் வளிமண்டலம் மோசமாக உள்ளது. மலையக பிரதேசங்களில் பலத்த சூறாவளியுடன் குளிந்த காலநிலையும் மாறியுள்ளது. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மிகையான குளிருடன் மழையும், அச்சுறுத்தலான தூசுகள் நிறைந்த காற்றும் வீசும் என ஆளுநர்களாலும் எச்சரிக்கப்பட்டுள்ளதால் நாளை (09.12.2022) பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு போக்குவரத்து என்பவற்றில் கவனம் செலுத்தி பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக அவசர தீர்மானம் எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நாளை இன்று மாதிரியான சூழ்நிலை நிலவுமாக இருந்தால் மாணவர்களை பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்புவதில் அச்சம் கொண்டுள்ளனர். ஆகையால் நாளைய தினம் பாடசாலைகளை மூடுவதே பொருத்தம் என பலரும் கருதுவதால் பொருத்தமான முடிவினை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பொதுச் செயலாளர், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.
පාසල් සිසුන්ගේ ආරක්ෂාව සහ ප්රවාහනය පිළිබඳ අවධානය යොමු කරමින් හෙට දිනයේ පාසල් පැවැත්වීම සම්බන්ධයෙන් කඩිනම් තීරණයක් ගන්නා ලෙස ශ්රී ලංකා දෙමළ ගුරු සංගමය ඉල්ලා සිටියි!
මේ වන විට රට පුරා වායුගෝලය අයහපත් ය. කඳුකර ප්රදේශවල දැඩි සුළි කුණාටු සමඟ උණුසුම් කාලගුණය ද වෙනස් වී තිබේ. උතුරු නැගෙනහිර ප්රදේශ වැසි සහ තර්ජනාත්මක දූලි සුළං සමග අධික ශීතල වන බවට ආණ්ඩුකාරවරුන් අනතුරු අඟවා ඇති බැවින් හෙට (2022.12.09) පාසල්වල ආරක්ෂාව සහ ප්රවාහනය පිළිබඳව අවධානය යොමුකර පාසල් පවත්වාගෙන යාම සම්බන්ධයෙන් කඩිනම් තීරණයක් ගන්නා ලෙස ඉල්ලා සිටිමු.
අද වගේ හෙට දවස උදා වුණොත් පාසල් යවන්න දෙමාපියන් බයයි. එම නිසා හෙට දිනයේ පාසල් වසා දැමීම සුදුසු බව බොහෝ දෙනාගේ අදහස වන බැවින් ඒ සඳහා සුදුසු තීරණයක් ප්රකාශ කරන මෙන් ඉල්ලා සිටිමු.
ප්රධාන ලේකම්, ශ්රී ලංකා දෙමළ ගුරු සංගමය.