ஆக்கத்திறன் – கோட்பாடும் பிரயோகமும்
க.சுவர்ணராஜா, முன்னாள் பீடாதிபதி, வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி
ஒரு பிள்ளை புதுமையான முறையிலே செயலாற்றுவதனை நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் , அதாவது அப்பிள்ளையின் சிந்தனையோ, செயலோ வழமையாக நாம் எதிர்பார்க்கின்ற நிலைப்பாட்டிலிருந்து வேறுப்பட்டுக் காணப்படும்போது அப்பிள்ளை படைப்பாற்றல் உள்ளவனெனக் குறிப்பிடுகின்றோம். (பேராசிரியர்.க.சின்னத்தம்பி)
· ஆக்கமலர்ச்சியை மேலெழச் செய்தல் கற்றல் கற்பித்தலின் உன்னத வெளிப்பாடாகக் கொள்ளப்படுகின்றது. (முனைவர்.சபா.ஜெயராசா)
· ஆக்கத்திறன் ,புதியவனவற்றைப் புனையும் திறன் போன்ற சொற்கள் கல்வியுலகத்தில் இன்று பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. (முனைவர்.பெ.பாஸ்கரன்)
வரைவிலக்கணங்கள்
1. ஆக்கத்திறன் என்பது நெகிழும் தன்மை, புதியன புனையுந்திறன், நுண்ணுணர்வு ஆகியவற்றின் சேர்க்கையாகும்.-ஜோன்ஸ்-
2. ஆக்கத்திறனானது புதிய கருத்துக்கள், அகக்காட்சி கண்டுபிடிப்புக்கள் அல்லது கலைத்தன்மை கொண்ட பொருட்களை ஆக்குதலுக்கான மனித ஆற்றலைக் குறிக்கின்றது.-வேணனன்-
3. பிரச்சினைகள் குறித்த நுண்ணுணர்வு, எண்ணங்களில் தடங்கலின்மை, நெகிழ்ச்சி புதியன புனையுந்திறன், மீள்வரைவிலக்கணங்கள், மீள் ஒழுங்குபடுத்தும் ஆற்றல், கிரகிக்கும் ஆற்றல், தொகுப்பு முடிவுக்கு வருதல் ஆகியன ஆக்கத்திறன்.-கில்பேர்ட்-
4. ஆக்கதிறனை ஒரு ஆக்கச் செயல் என தீhமானிப்பதற்கு நான்கு நியதிகளைப் பயன்படுத்த முடியும். அவையாவன புதுமை, பொருத்தமானதன்மை, மாற்றிப்பயன்படுத்துதல், சுருக்குதல் எனபனவாகும் புதுமை (தனித்தன்மை) பொருத்தமானதன்மை (தேவைகளுக்கு விருப்பங்களுக்குப் பொருத்தமானது.) மாற்றிப்பயன்படுத்துதல் (அணுகுமுறையில் தீவிர இடப்பெயர்ச்சி) சுருக்குதல் (மிகச்கச்சுருக்கம்) -ஜக்சன் மற்றும் மெஸிக்
ஆக்கத்திறனின் இயல்புகள்
1. ஒரு செயல்முறை
2. தனிச்சிறப்புடைய கற்பனை
3. பெறுமானம் உண்டு
4. தனித்துவமானது
5. விரிசிந்தனையுடன் தொடர்புடையது.
6. புதுமைகளின் விளைவுகளுக்கு வழிவகுக்கும்
7. சிந்தனை வளர்ச்சியுடன் தொடர்புடையது.
8. நுண்மதியுடன் கட்டாய தொடர்பு இல்லை.
9. மனித முன்னேறத்திற்கு ஆதாரமானது
ஆக்கத்திறனின் முக்கிய பண்புகள் (கில்பேர்ட்)
1. பிரச்சினைகள் பற்றிய நுண்ணுணர்வு (Sensitivity)
2. தடையின்றி துரிதமாக சிந்தித்தல் (Ideational fluency )
3. சிநதனையில் நெகிழ்ச்சி (Flexibility)
4. தனித்தன்மை ( Originality)
5. அக்காட்சி தாவல் ( Intuitive)
6. விடா முயற்சி (Persistence)
7. தன்னம்பிக்கை ( Self — Confidence)
8. புதிய தொடர்புகளைக் காணவிழைதல் (Seeking new relationship)
ஆக்கத்திறனின் எளிய நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலை வரையிலான 5படி நிலைகள்.
1. வெளிப்பாட்டு நிலை- கற்பனை விளையாட்டு (சுதந்திர வெளிப்பாடு)
2. ஆக்கநிலை — கைப்பணிப்பொருட்கள் (நுட்ப பிரயோகம்)
3. கண்டுபிடிப்பு நிலை- ஒரு கலை அல்லது. ஓவியம் (புதுமை படைக்கும் திறன்)
4. புத்தாக்க நிலை- மோட்டார் இயந்திரம் (மரபிலிருந்து விலகல்)
5. உடன் தோன்றும் நிலை — கோட்பாடு கண்டுபிடிப்பு
மாணவர்களின் ஆக்கத்திறன் விருத்தியை ஊக்குவிக்கக்கூடிய வகுப்பறை செயற்பாடுகள்.
1.வினாக்கள் கேட்க மாணவர்களை தூண்டுதல்
2.மாணவர்களின் புதிய கருத்துகளுக்கு பெறுமதி அளித்தல்
3.செயற்றிட்ட வேலைகள் முலம் சுயகற்றலை ஊக்குவித்தல்
4.வாசிக்க ஊக்கம் கொடுத்தல்
5.சிந்தனை சக்தியை தூண்டுதல்
6.ஆர்வமான விடயங்கள் பற்றி கலந்துரையாடல்
7.அடைவுகளுக்கு உரிய கணிப்பைக் கொடுத்தல்
மாணவர்களின் ஆக்கத்திறன் விருத்தியைத் தடைசெய்யக்கூடிய வகுப்பறைச்செயற்பாடுகள்
1.நெகிழ்ச்சியற்ற நேர அட்டவணை
2.தடையற்ற வகுப்பேற்றம்
3.இரட்டிப்பு வகுப்பேற்றம்
4.பரீட்சை சித்திக்கு முக்கியத்துவம்
5.ஆசிரியர் மைய பாடவிதானம்
6.பிழையான ஆசிரியர் மனப்பாங்கு
ஆக்கத்திறனுடைய ஆரம்பப்பாடசாலை மாணவர்கள்
1. நன்றாக செயற்படுவார்கள்
2. சுற்றாடலில் மிக ஆர்வம்
3. நல்ல ஞாபகசக்தி
4. சொற்களஞ்சியத்தை விரைவாகப்பெறல்
5. கவிதைகளை ஞாபகத்தில் வைத்திருத்தல்
6. பொருட்களை ஆராய்வதில், கையாள்வதில் விருப்பம்
7. விடயங்களை விரைவில் விளங்கிக்கொள்ளும் திறன்
ஆக்கத்திறனுடைய இடைநிலை மாணவர்கள்
1. கடினமான வேலைகளை இலகுவில் செய்வர்
2. சோர்வடையாது வேலையை நிறுத்துவர்
3. விரைவாக கிரகிப்பு
4. புதிய தொடர்புகளை இனங்காணல்
5. கல்வி செயற்பாடுகளில் அதிக புள்ளிகள் பெறுதல்
6. சொற்களஞ்சிய விருத்தி
7. கண்டுபிடிப்பு
8. புதிய கருத்துகளை, வினாக்களை உருவாக்கும் திறன்
9. தலைமைத்துவம்
பிள்ளைகளின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்குரிய 10 பண்புகள்
1. அறிவுடைநிலை
2. விடாமுயற்சி
3. ஆபத்து நிலைகளை எதிர்நோக்கல்
4. நுண்ணுணர்வு
5. கற்பனை
6. ஆர்வம்
7. தடையற்ற சிந்தனை
8. சிந்தனை நெகிழ்ச்சி
9. புதியன புனையுந்திறன்
10. முழுமையாக்குதல் அல்லது விரிவாக்குதல்
ஆக்கத்திறனின் முக்கியத்துவம்
1. பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித மேம்பாடு என்பவற்றிக்காக தேசிய மற்றும் உலக அளவில் ஆக்கத்திறன் பற்றிய தேர்ச்சி முக்கியமானது.
2. ஆனால் ஆக்கத்திறன் ஒரு தனியாள் மட்டத்திலும் முக்கியமானது என்பதற்கான அங்கீகாரம் அதிகரித்து வருகிறது.
3. ஆக்கத்திறன் கற்பவர்களின் சுயமரியாதை, உந்துதல் மற்றும் சாதனை ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
4. ஆக்கப்பூர்வமாக சிந்திக்க ஊக்குவிக்கப்படும் மாணவர்கள் தங்களைத் தாங்களே கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்களாக உள்ளனர்
ஆக்கத்திறன் பின்வரும் தேர்ச்சிகளை மனிதர்களிடம் உருவாக்கும்
1. புதிய சிந்தனைகளை முன்வைத்தல்
2. பிர்ச்சினை தீர்த்தல்
3. மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றல்
4. பயனுள்ளசெயற்பாடுகளில் சுயமாக ஈடுபடல்
5. மாற்றங்களுக்கு இலகுவாக ஈடு கொடுத்தல்
6. கற்றல் உரிமைகளை அடைதல்
7. சுய உற்பத்தியில் ஈடுபடல்
8. மாற்று கருவிகளை உருவாக்குதல்
9. இடர் காலங்களில் துணிவுடன் பணியாற்றல்
ஆக்கச்செயற்பாட்டின் படிநிலைகள்
1. ஆயத்தநிலை
• கற்பனை விளையாட்டு
• பந்திக்கு தலைப்பிடுதல்
• பாடம் பற்றிய கருத்துக்களைக்கூறல்
• பல்வேறு தீர்வுகளில் ஒன்றைத்தெரிதல்
2. உள்வளர்ச்சிப் படிநிலை
• தீர்வுகாணப்படாத பிரச்சினைகள் மனதில் அடக்கப்பட்டு சிந்திப்போருக்கு தெரியாதவகையில் தீர்வு காணப்படல்.
3. ஒளிர்தல் படிநிலை
• உள்வளர்ச்சிப்படிநிலையில் இறுதித்தீர்வுக்கான தகவல் ஒழுங்கமைப்பு உருவாகி சடுதியாக நனவு நிலைக்கு வருதல்
4. உறுதிப்படுத்தல் படிநிலை
• சடுதியாக வெளிவரும் தீர்வுகளின் பொருத்தப்பாடு பற்றி அலசி ஆராய்தல் ,ஒவ்வொரு படியிலும் எவ்வளவு காலத்தை செலவிடுகின்றனர் என்பது ,ஒருவரின் இயல்புகளில் தங்கியுள்ளன.
சிலர் விரைவாக இயங்கலாம்
ஆக்கமும் நுண்மதியும்
ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது என பல ஆய்வுகள் — ஆனால் ஒன்றில் ஒன்று பெரிதும் தங்கியிருக்கவில்லை.
உயர்நுண்மதிப்பு — படைப்பாற்றல் இல்லாதிருக்கலாம்.
ஆக்கமும் வகுப்பறை ஒழுங்கமைப்பும்
1. சுதந்திரமான சூழலில் தொழிற்படும் வாய்ப்பு பிழையான தீர்வுகளை முடிவுகளை கண்டிக்காமை.
2. தீர்வுகளை விரைவாக முன்வைக்கும்படி வற்புறுத்தாமை.
3. முறைசாரா ஒழுங்கமைப்பு (சான்று கிடையாது)
4. கடின உழைப்பு
5. நீடித்த பயிற்சி
6. நெகிழ்ச்சியான நேரசூசி
7. நேர்நிலை நோக்கு
வகுப்பறையில் மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தியாக்கவதற்கான உதவுமுறைகள்
o கனிவுள்ள ஒத்துணர்வுள்ள ஏற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குங்கள்.
o மாணவர்களின் யோசனைகளுடன் இணைந்து செயற்படுங்கள்
o மாணவர்களின் சுயாட்சியை ஊக்குவிக்க தயங்காதீர்கள்
o ஆக்கச்சிந்தனையை மேம்படுத்துவதற்கான ஒப்படைகளை வழங்குங்கள்
o மாணவர்களின் ஆக்கத்திறன் குறித்து நேரடியாக வெளிப்படையாகக்கருத்து தெரிவியுங்கள்
o பொருத்தமான ஆக்கப்பூர்வதன்மை பற்றி மாணவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
o கற்பித்தலில் ஆக்கபூர்வமான அறிவுறுத்தல் உத்திகள், மாதிரிகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்துங்கள்
o ஆக்கத்துடன் இணைந்துள்ள தவறான நடத்தைகளிலிருந்து விடுபட உதவுங்கள்.
o மாணவர்களின் உள்ளார்ந்த உந்துதல்களை பாதுகாத்து நெறிப்படுத்துங்கள்.
o ஆக்கத்திறன் விருத்திக்கு கடுமையான விடா முயற்சி தேவை என்பதை மாணவர்களிடம் வலியுறுத்துங்கள்
o மாணவர்களின் ஆக்கத்திறன் பற்றி விவாதியுங்கள்
o மாணவர்களின் ஆக்கத்திற்கு மேலும் சவால்களை வழங்குங்கள்
o ஆக்கத்திறன் விருத்திக்கு மேலும் பயிற்சி கொடுங்கள்.
o மாணவர்கள் தமது கற்றலுக்கான உபகரணங்களை முடிந்தவரை தாங்களே தயாரிக்க வழிப்படுத்துங்கள்
ஆக்கவிருத்தியின் பின்னணி
1. பிள்ளைப்பருவத்தில் கிடைக்கும் பலதரப்பட்ட அனுபவம்
2. சுதந்திரமாக வினா எழுப்ப முடிந்தமை
3. கருத்துக்களைப் பரிசோதித்துப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தமை
4. பொருத்தமான ஓய்வுநேரப்பணிகள்
5. நாட்டங்களை முன்னெடுத்துச்செல்ல முடிதல்
6. சிறப்பான ஆற்றல், திறன்களை தம்மில் விருத்திசெய்து கொண்டமை.
மாணவர்களின் ஆக்கத்தில் ஆசிரியர் பங்கு
1. களிப்புறும் மனப்பாங்கு
2. துருவி ஆராய்தல்
3. வகுப்பிற்கு உள்ளே வெளியே பகிர்வு
4. வினாக்களுக்கு செவிசாய்த்தல்
5. நெகிழ்ச்சியான சிந்தனை
6. தன் கருத்தை திணிக்காமை
7. மாணவர் கருத்துக்களை மாணவர்களே தொகுத்துக்கூற வழிப்படுத்தல்
8. நடைமுறை சாத்தியம் நிலைப்பாட்டினை சுட்டுதல் தவிர்த்தல்
ஆக்கத்தை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர் மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள்
1. மாணவர் எழுப்பும் வினாக்களுக்கு விடையளிப்பதில் நலிவான வினாக்களை புறக்கணிக்காமை, பொருத்தமான வினா எழுப்ப வழிகாட்டல், விடையினை தேடிப்பிடிக்க வழிகாட்டல்
2. கற்பனாசக்திமிக்க கருத்துக்களை கண்ணியமாக நோக்குதல், ஏளனத்தைத்தவிர்த்தல், நியாயபூர்வ தன்மை பற்றி மாணவர் சிந்திக்க வழிகாட்டல்
3. பிள்ளைகளின் கருத்துக்களுக்கு பெறுமதி உரைத்தல்
4. போதிய கால அவகாசம் வழங்குதல்
5. புதுமைநோக்கு பற்றி அச்சப்பாட்டினைத் தவிர்த்தல்
6. மதிப்பீட்டில் காரணகாரிய தொடர்பினை விளக்குதல்
ஆக்கத்திறன் சோதனைகள்
1.ஆக்கச் சிந்தனைபற்றிய மின்சோட்டா சோதனைகள்
2.கில்பேர்ட்டின் விரிசிந்தனை
3.வோல்க்மோகன் ஆக்கத்திறன் கருவிகள்
4.விரி உற்பத்தித்திறன் பற்றிய சர்மாவின் சோதனை
5.பாசியின் ஆக்கத்திறன் சோதனை
ஆசிரியர்களும் ஆக்கத்திறனும்
1. கற்பித்தல் ஒரு ஆக்கம் நிறைந்த சேவையாகும்இ ஆகவே ஆசிரியர்கள் கட்டாயம் ஆக்கத்திறனை வளர்த்துக் கொள்வது அவசியமாகும்.
2. ஆக்கதிறன் என்பது புதுமை புனைதல் கலை உருவாக்கம் என்பது மட்டுமல்ல ஆக்கப்பூர்வமாக வாழ்வதும் அதில் அடங்கியுள்ளது.
3. ஆசிரியர்கள் தமது வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலையும் ஆக்கப்பூர்வமாக அணுகதல் வேண்டும்.
4. ஆக்கத்திறனுடன் செயற்படும் ஆசிரியர்களின் கற்பித்தல் உள்ளடக்கத்தின் ஒரு பகுதி ஆக்கப்பூர்வ விளையாட்டுகள், நகைச்சுவைமிக்க கல்ந்துரையாடல்கள், நடிப்பு, மாற்றி யோசித்தல் ,சிந்தனை கிளறல்கள்,கதை கூறல் என்பவற்றைக் கொண்டதாக இருக்கும்.
5. ஆசிரியர்களின் நேர்நிலைச்சிந்தனைகள் ஆக்கவிருத்திக்கு அடிப்படையாக அமையும்.
ஆசிரியர்கள் தமது ஆக்கத்திறன் விருத்திக்காக செய்ய வேண்டியவை.
1. ஆக்கத்திறன் விருத்தி தொடர்பான தனது தவறான கண்ணோட்டங்களை மாற்றி அமைத்தல் வேண்டும்.
2. வகுப்பறையில் புதிய கற்பித்தல் அணுகுமுறைகளை கையாண்டு அது தொடர்பாக பிரதிபலிப்பு பெறுதல் வேண்டும்.
3. பாடத்தை ஆக்கப்பூர்வமாக திட்டமிடல் வேண்டும் அது பொடர்பாக தொடர்ந்து உசாவுதல் வேண்டும்.
4. ஆக்கப்பூர்வமாக கற்பிக்கும் ஆசிரியர்களுடன் இணைந்து கற்பித்தல் வேண்டும்
5. ஆக்கப்பூர்வமான கற்பித்தலுக்காக மாணவர்களின் பிரச்சினைகள், நடத்தை கோலங்கள் ,அவர்களது திறன்கள் தொடர்பாக பிரதிபலிப்புகளை தினமும் தவறாது பதிவு செய்தல் வேண்டும்.
6. முடிந்தவரை அருட்காட்சியங்கள் நூதனசாலைகள், கலைப்படைப்புக்கள் என்பவற்றை பார்வையிடல் வேண்டும்.
7. மாணவர்களின் தவறான நடத்தைகளை சகிப்புதன்மையுடன் நோக்குதல் வேண்டும்.
8. தொடர்ச்சியாக நல்ல இசையை செவிமடுத்தல் வேண்டும்.
9. மன அமைதிக்கான செயற்பாடுகளில் ஈடுபடல் வேண்டும்.
10. பதிய விடயங்களை துணிவுடன் தொடங்கி அதில் ஈடுபடல் வேண்டும்.