The Ceylon Teachers Union (CTU) today said that the daily payment assigned for examiners to check the 2022 GCE Advanced Level (A/L) must increase to Rs.3,000.
நாளாந்தக் கொடெப்பனவு 3000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் – ஸ்டாலின்
2022 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டிற்கான நாளாந்த கொடுப்பனவு ரூபா 3,000 ஆக அதிகரிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) இன்று தெரிவித்துள்ளது.
விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.2,000 போதாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதற்கான நாளாந்த கொடுப்பனவை ரூபா 3,000 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை பத்திரம் மூலம் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் தினசரி கொடுப்பனவு ரூ.2,000 மட்டுமே வழங்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, மாணவர்களின் நலன் தொடர்பாக அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும், என்றும் இது மேலும் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமத்த்தை ஏற்படுத்தும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
“மதிப்பீட்டு நடவடிக்கைகளை தொடர ஆசிரியர்கள் ஆர்வமாக உள்ளனர் என்றும் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அரசாங்கத்தால் பிரச்சினை உருவாக்கப்பட்ட நேரத்திலும் கூட, ஆசிரியர்கள் கட்டணம் ஏதுமின்றி பங்களித்தனர்,” என்றும் அவர் கூறினார்.
அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்ட நாளாந்தக் கட்டணத்தை வழங்குவது பொருத்தமானது, மேலும் இது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கலை எளிதாக்க உதவும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
அறிவிக்கப்பட்ட கொடுப்பனவுகள் போதாது என்பது பரீட்சை திணைக்களத்துக்கும் தெரியும். எனவே, இந்தப் பிரச்னையில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களம் மீண்டும் கோரியுள்ளது.
அதன்படி, மார்ச் 8ம் திகதி வரை ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டால் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதும் தாமதமாகும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது