அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரிய சேவைக்கு-இவ்வருடத்திற்குள் பரீட்சை
2018, 2019, 2020 இல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளை போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அனைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் 31/10/2022 அன்று பெறப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதனால், அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின் பிரகாரம், ஆசிரியர் சேவைக்கான தகைமைகளை பூர்த்தி செய்யும் பட்டதாரிகளை நாடளாவிய ரீதியில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு பரீட்சை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாகாண அடிப்படையில் பெறுபேறுகள் வழங்கப்படும்.
மேலும் கற்பித்தல் டிப்ளோமா பாடநெறியினூடாக பயிற்சி வழங்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிப் பரீட்சை பெறுபேறு மற்றும் மாகாண மற்றும் பிராந்திய மட்டத்தில் நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வின் பின்னர், ஆசிரியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு செய்யப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
https://sinhala.teachmore.lk/?p=848