பாடசாலைகளில் போதைப்பொருள் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தின் ஒரு பகுதியாக பாடசாலை மாணவர்களின் பேருந்துகள் மற்றும் வேன்களில் போதைப்பொருள் சோதனைகளை நடத்துவதற்கு பொலிஸார் பாடசாலை அதிகாரிகளுடன் ஒத்துழைப்பார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், போசாக்கு திட்டத்திற்கு மேலதிகமாக தற்போது கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளில் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. ஜனவரி மாதம் தொடங்கி, நாடு முழுவதும் உள்ள 100 கல்வி வலயங்களில் 10,150 பாடசாலைகளைக் கொண்ட இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜனவரி 2, 2023 அன்று, பொலிஸ் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் பாடசாலைகளில் போதைப்பொருளை தடை செய்வதற்கான பிரச்சாரம் ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.
அனைத்து மாகாண பணிப்பாளர்களும் இது தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களையும் பெற்றுள்ளனர். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கல்வி அமைச்சின் செயலகம் மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கும் என்றார்.
“பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாடசாலைக்குப் பிறகு தனிப்பட்ட வகுப்புக்கள் போன்ற மேலதிக நடவடிக்கைகளில் பங்கேற்கும்போது அவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில், குழந்தைகள் மீது எங்களுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. “குழந்தைகள் அதிகபட்சமாக ஆறு மணி நேரம் பாடசாலைக்குச் செல்வார்கள்” என்று அமைச்சர் கூறினார்.
අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත පවසන පරිදි, පාසල්වල මත්ද්රව්ය උවදුර අවසන් කිරීමේ යෝජනා ක්රමයේ කොටසක් ලෙස පාසල් ළමුන්ගේ බස් රථ සහ වෑන් රථවල මත්ද්රව්ය පරීක්ෂා කිරීමට පොලිසිය පාසල් නිලධාරීන් සමඟ සහයෝගයෙන් කටයුතු කරන බව ය.
මාධ්ය වෙත ප්රකාශයක් කරමින් ඔහු කියා සිටියේ පෝෂණ වැඩසටහනට අමතරව මත්ද්රව්ය නිවාරණ වැඩසටහනක් මේ වන විට කොළඹ නගරයේ පාසල් 144ක ක්රියාත්මක වන බවයි. ජනවාරි මාසයේ සිට දිවයින පුරා පාසල් 10,150කින් සමන්විත අධ්යාපන කලාප 100ක මෙම වැඩසටහන හඳුන්වා දෙන බවද ඔහු පැවසීය.
ඔහු ප්රකාශ කළේ 2023 ජනවාරි 2 වැනිදා පාසල්වලින් මත්ද්රව්ය තහනම් කිරීමේ නිශ්චිත ව්යාපාරයක් පොලිස් දෙපාර්තමේන්තුවේ සහයෝගය ඇතිව ආරම්භ කරන බවයි.
සියලුම පළාත් අධ්යක්ෂවරුන්ට සියලුම වැඩසටහන් සම්බන්ධ උපදෙස් ලැබී ඇත. ඉදිරි දින දෙක තුන ඇතුළත අධ්යාපන අමාත්යාංශ ලේකම් කාර්යාලය වැඩිදුර උපදෙස් ලබා දෙනු ඇත.
“පාසලෙන් පසු පෞද්ගලික පාඩම් වැනි විෂය බාහිර ක්රියාකාරකම්වලට සහභාගී වන විට දෙමාපියන් තම දරුවන් කෙරෙහි වැඩි අවධානයක් යොමු කළ යුතුය. එවැනි තත්වයන් තුළ, අපට දරුවන් කෙරෙහි කිසිදු බලපෑමක් නැත. අමාත්යවරයා ප්රකාශ කළේ “ළමයින් පාසල් ගියේ උපරිම පැය හයක්” බවයි.