புதிய கல்விச் சீர்த்திருத்தத்திற்காக ஆங்கில மொழித் தேர்ச்சி அத்திவசியமானது என்பதோடு புதிய சீர்திருத்தத்தின் அடிப்படையில் அடுத்த வருடம் முதல் தரம் ஒன்று முதலே ஆங்கில மொழிக் கல்விக்கான நடவடிக்கைககள் மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தரம் 6 முதல் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய தாய்மொழிகளினூடாகவும் ஆங்கிலத்திலும் கற்பிக்க முன்மொழிகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தப் பபாடங்களில் அதிக கலைச்சொற்கள் ஆங்கிலத்துடன் தொடர்புபட்டுள்ளதால் மாணவர்கள் விரைவாக மொழியைக் கற்றுக் கொள்வார்கள் என்றும் இதனால் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கிராமப் புற மாணவர்களின் பின்னடைவிற்கு ஒரு காரணமான கணித விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களின் பற்றாக்குறையை தவிர்ந்து கொள்வதற்காக ஆங்கில மொழிப் புலமையை வழங்குவதற்கு வேறு செயற்றிட்டமொன்றை இப்போது நடைமுறைப்படுத்துவதாகவும் பல்கலைக்கழமும் இலங்கைக கல்வியியலாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசர்களினதும் பங்களிப்பை அவதானிக்க முடிவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்காக தேசிய சேமிப்பு வங்கியின் பங்களிப்புடன் கல்வி அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் “English is Simple” ஆங்கில மொழி ஊக்குவிப்புத் திட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த ஆங்கில மொழி ஊக்குவிப்பு திட்டத்தின் படி, பாடசாலைப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து இடைநிலைப் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு திறன் சார்ந்த செயல்பாட்டுக் கையேடுகள் மற்றும் குறுந்தகடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.