மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற புலத்சிங்கல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல பாடசாலைகளுக்கு அந்த அபாயம் முடியும் வரை விடுமுறை வழங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நான்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஹொரணை கல்விப் பிரிவில் உள்ள புலத்சிங்கல ஹல்வத்துர தமிழ் வித்தியாலயம், பரகொட கித்துலகொட கனிஷ்ட கல்லூரி மற்றும் மேல் வெல்கம கனிஷ்ட கல்லூரி என்பன நேற்று (07) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த மொல்காவ தர்மபால மகா வித்தியாலயம், வெள்ள அபாயம் குறையும் வரை சிறுவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
නායයෑමේ අවදානම පවතින බුලත්සිංහල ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ පාසල් කිහිපයකට අවදානම පහව යන තුරු නිවාඩු ලබා දීමට බලධාරීන් තීරණය කොට තිබෙනවා.
ඒ අනුව බුලත්සිංහල ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ පාසල් හතරකට මෙසේ නිවාඩු ලබා දීමටයි තීරණය කොට ඇත්තේ.
හොරණ අධ්යාපන කොට්ඨාසයේ බුලත්සිංහල හල්වතුර දෙමල විද්යාලය, පරගොඩ කිතුලගොඩ කනිෂ්ඨ විද්යාලය සහ ඉහළ වෙල්ගම කණිෂ්ඨ විද්යාලය යන විදුහල් ඊයේ(07) සිට තාව කාලිකව වසා එහි සිසු සිසුවියන්ට නිවාඩු ලබා දී ඇති බවයි තොරතුරු වාර්තා වෙන්නේ
එමෙන් ම මතුගම කලාපයට අයත් මෝල්කාව ධර්මපාල මහා විද්යලයද ගංවතුර තර්ජන හේතුවෙන් වසා අවදානම පහව යන තුරු දරුවන්ට තම නිවෙස්වල සිටින ලෙස දැනුම්වත් කර ඇති බවයි වැඩිදුරටත් වාර්තා වෙන්නේ.