அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக எதிர்வரும் 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினாலேயே QR முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் இருப்பு போதுமானதாக இருந்த போதும் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் விநியோகம் செய்வது நடைமுறை சாத்தியமற்றது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.