” அடக்கு முறையை தோற்கடிப்போம்”
“மக்கள் ஆணையை வென்றெடுப்போம்.”
ஆசியாவிலேயே முதலாவது தொழிற்சங்க நடவடிக்கையானது இலங்கையில் தான் முதன்முதலாக 1893 ஆம் ஆண்டு தொடங்கியது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் சமீப காலமாக தொழிற்சங்கங்களின் பங்களிப்பானது இந்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது அந்த வகையிலே கடந்த பல தசாப்தங்களாக பல
வெற்றிப்படிகளை தாண்டி
இன்று கல்வி கட்டமைப்பில் போற்றத்தக்க வகையில் இலங்கை ஆசிரியர் சங்கமானது தனது 65 ஆவது அகவையில் தடம் பதிக்கிறது. மிக நீண்ட தொழிற்சங்க வரலாற்றை உடையதும் ஐம்பெரும் சக்திகளில் ஒன்றான கல்வியின் பெருமைதனை உலகறிய செய்த இலங்கையிலே மிக அதிகமான ஆளணியினரை அங்கத்தவர்களாக கொண்ட அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்கமே இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகும்.
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும்
உலகளாவிய ரீதியில் ஆசியாவின் முக்கிய தொழிற்சங்கமாக உருவெடுத்து இன்று இலங்கை ஆசிரியர் சங்கமானது மீண்டும் ஒருமுறை தமது நம்பகத் தன்மையை…… உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களின் போது எந்தவித அரசியல் லாபங்களுக்காகவும்.. இன்றி கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு சுயமாக முடிவெடுத்து எவ்வித அழுத்தங்களுக்கும் உட்படாது செயல்படக்கூடிய முக்கிய தொழிற்சங்கமாக இலங்கை ஆசிரியர் சங்கம் திகழ்கின்றது என்பது கண்கூடு இலங்கை மக்களின் நலன்களுக்காக சமூக, பொருளாதார ,மற்றும் அரசியல் உள்ளிட்ட, அனைத்து துறைகளிலும் குறிப்பாக கல்வி கட்டமைப்பிலே எதிர்கொள்கின்ற சவால்கள் தடைகள் …லஞ்ச ஊழல் அரசியல் பழிவாங்கல் போன்றவற்றை வெளிக்கொணர்ந்து அதற்கான நியாயமான தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக பல சட்ட ரீதியான அணுகுமுறைகளையும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் தொடர்பாக முறைப்பாடுகள் மேற்கொள்வதன் ஊடாகவும் சர்வதேச சபைகளினுடைய ஆதரவினை பெற்று அவர்களுடைய பங்களிப்போடு நீதி நியாயத்தை நிலை நாட்டுவதற்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுப்புகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்ததுடன் தொடர்ச்சியாக அவ்வாறான பணிகளில் மேலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் . அதே நேரம் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் நிலை நாட்டுவதற்காகவும் இலவசக் கல்வியினை பாதுகாப்பதற்காகவும் கல்வியிலே ஊழலை இல்லாது ஒழித்து தகுதியானவர்களை இப்பணியில் இணைத்து இலங்கையின் கல்வி தரத்தினை பாதுகாப்பதற்காகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் பல தடைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு செயல்படுகின்றது என்பது இங்கே குறிப்பிடக்கூடிய விடயமாகும். ஒரு தேசத்தின் அபிவிருத்தியானது அந்நாட்டு மாணவ சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றது அந்த வகையிலே இலங்கையில் கல்வி கற்கும் மாணவர்களுடைய அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதுடன் சர்வதேசரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட திட்டங்கள் ஒப்பந்தங்கள் போன்றவற்றின் உறுதிப்பாட்டையும் நிலைப்புத் தன்மையையும் உறுதி செய்வதற்காக தொடர்ச்சியாக இலங்கை ஆசிரியர் சங்கமானது குரல் கொடுத்து வருகின்றது அதே நேரம் இன்று பல தசாப்தங்களாக பல வழிகளிலும் ஏமாற்றப்பட்டு வந்த அதிபர் ஆசிரியர்களுடைய பொருளாதார நன்நிலை தொழில் நிபுணத்துவம் தொழில் அங்கீகாரம் அவர்களுக்கான சலுகைகள் பதவி உயர்வுகள் பதவி படிநிலைகள் நியமனங்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக தமது கவனத்தை செலுத்தி வருகின்றது என்பது எமக்கு ஆறுதலை அளிக்கின்றது. எனினும் அண்மை காலங்களில் அவசரகால சட்டம் , ஊடக தடை , அரசு வன்முறைகள், அரசு அடக்குமுறைகள், அநீதியான முறையிலான கைதுகள் போன்றபல தடைகளின் ஊடாக அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க தலைவர்களின் குரல்களை ஒடுக்குவதற்காக பல முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு இருந்தாலும் அவை அனைத்தையும் தகர்த்தெறிந்து இன்று பெரும் சக்திகளாக அதிபர் ஆசிரியர்களுடைய சக்தி இந்நாட்டினுடைய வளர்ச்சியிலே நிலைப்பு தன்மையில் முக்கிய ஒரு இடத்தை பெற்றிருக்கின்றது. எனவே நாடு மிக விசித்திரமான முறையிலே தீவிரமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள துரதிஷ்டமான நேரத்தில் மாற்றத்தை வேண்டி நிற்கும் எமது தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அதிபர் ஆசிரியர்களுக்கும் எமது தோழமையான அழைப்பை மீண்டும் ஒருமுறை விடுக்கின்றோம்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி 2022 அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு இடம் பெறும்.
“எமது பலமே நாட்டின் விடியலுக்கான அறைகூவல் ”
“මර්දනය පරදවමු”
“ජන අපේක්ෂා දිනවමු.”
ආසියාවේ ප්රථම වෘත්තීය සමිති ක්රියාකාරකම 1893 දී ලංකාවෙන් ආරම්භ විය.පසුගිය කාලයේ මෙරට ජනතාව අතර වෘත්තීය සමිතිවල දායකත්වය වඩාත් ජනප්රිය විය.මේ ආකාරයට ලංකා ගුරු සංගමය පසුගිය වසර කීපය තුළම බාධක රැසක් ජයගෙන ඇත. දශක ගණනාවක් තිස්සේ එහි 65 වැනි රැස්වීමේදී අධ්යාපන ව්යුහය තුළ ප්රශංසනීය සලකුණක් තබයි. දීර්ඝතම වෘත්තීය සමිති ඉතිහාසයකට හිමිකම් කියන, අධ්යාපනයේ පංච මහා බලවෙගල එකක් වන ලංකා ගුරු සංගමය ශ්රී ලංකාවේ වැඩිම සාමාජිකයින් සංඛ්යාවක් සිටින ප්රධාන ගුරු සංගමයයි.ජාත්යන්තර පිළිගැනීමට ලක්ව ඇති ලංකා ගුරු සංගමය ආසියාවේ ප්රධාන වෘත්තීය සමිතිය ලෙස නැගී සිටීමෙන් තම විශ්වසනීයත්වය නැවත වරක් ලොවට ප්රදර්ශනය කළේය. අතීතයේ දී ලංකා ගුරු සංගමය පක්ෂ දේශපාලනයෙන් තොරව, දේශපාලන වාසිවලින් තොරව ස්වාධීනව කටයුතු කළ හැකි ප්රධාන වෘත්තීය සමිතියක් වූ අතර, ලාංකේය ජනතාවගේ අවශ්යතා වෙනුවෙන්, සමාජ-ආර්ථික, දේශපාලන ඇතුළු සියලු ක්ෂේත්රවල මුහුණ දුන් අභියෝග, විශේෂයෙන්ම අධ්යාපන ව්යූහය තුළ යනාදී වශයෙන් ලංකා ගුරු සංගමයේ සාමාජිකයින් ජාත්යන්තර සංවිධානවල සහය ඇතිව සහ ඔවුන්ගේ සහභාගීත්වයෙන් යුක්තිය සහ යුක්තිය ආරක්ෂා කිරීම සඳහා රටපුරා විවිධ විරෝධතා සහ මුලපිරීම් සාර්ථක ලෙස සිදු කර ඇත. අඛණ්ඩව එවැනි කටයුතුවල තවදුරටත් ප්රගතියක් ලබා ගැනීම මෙන්ම විදුහල්පති ගුරු ශිෂ්ය ශිෂ්යාවන්ගේ අයිතීන් හා වරප්රසාද රැක ගැනීමටත්, නිදහස් අධ්යාපනය සුරැකීමටත්, දූෂණය පිටුදැකීමටත් ලංකා ගුරු සංගමය නොයෙකුත් බාධක අභියෝග මධ්යයේ ක්රියා කරන බවද මෙහිදී සඳහන් කළ යුතුය. අධ්යාපනය සහ ශ්රී ලංකාවේ අධ්යාපනයේ ගුණාත්මක භාවය ආරක්ෂා කිරීම සඳහා සුදුසුකම් ඇති පුද්ගලයින් මෙම කාර්යයට සම්බන්ධ කර ගැනීම. ජාතියක සංවර්ධනය තීරණය වන්නේ රටේ ශිෂ්ය ප්රජාවගේ අධ්යාපනික දියුණුව මතයි.ශ්රී ලංකාවේ අධ්යාපනය ලබන සිසුන්ගේ මූලික අයිතිවාසිකම් තහවුරු කිරීම සඳහාත් ජාත්යන්තරව පිළිගත් නීති වැඩසටහන් සහ ගිවිසුම්වල ස්ථාවරත්වය සහ තිරසාරභාවය තහවුරු කිරීම සඳහාත් ලාංකේය ගුරුවරුන් සංගමය අඛණ්ඩව හඬ නඟමින් සිටියි.ගුරුවරුන්ගේ ආර්ථික යහපැවැත්ම, වෘත්තීය විශේෂඥතාව, වෘත්තීය පිළිගැනීම, ඔවුන් සඳහා වන ප්රතිලාභ, උසස්වීම්, තනතුරු, පත්වීම් ආදිය පිළිබඳව අවධානය යොමු කිරීම අපට සහනයක් ගෙන දෙයි. නමුත් පසුගිය කාලයේ හදිසි නීතිය, මාධ්ය තහනම, රජයේ ප්රචණ්ඩත්වය, ආණ්ඩුවේ මර්දනය, අසාධාරණ අත්අඩංගුවට ගැනීම් ආදී බොහෝ බාධක හරහා විදුහල්පති ගුරු සංගම් නායකයන්ගේ හඬ යටපත් කිරීමට රජය බොහෝ ක්රියාමාර්ග ගත් නමුත් ඒ සියල්ල විනාශ වී අද වන විට විදුහල්පති ගුරුවරුන්ගේ බලය මේ රටේ සංවර්ධනයේ ඉතා අමුතු අන්දමින් වැදගත් ස්ථානයක් ගෙන ඇත.බරපතල අර්බුදවලට මුහුණ දී ඇත. වෙනසක් ඉල්ලා අපගේ වෘත්තීය සමිති ක්රියාකාරකම් වලට සහභාගී වන ලෙස දිවයින පුරා සිටින සියලුම විදුහල්පති ගුරුවරුන් වෙත අපගේ සුහද ආරාධනාව නැවත වරක් ලබා දෙන්නෙමු.ලබන සැප්තැම්බර් 23, 2022 අනුරාධපුර මධ්ය මහා විද්යාලය පෙරවරු 10 ට ශ්රවණාගාරයේදී පැවැත්වේ.
“අපේ ශක්තිය උදාව සඳහා රට කැඳවීමයි”