සිංහලෙන් කිියවන්න
பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் பகலுணவு செயற்திட்டம்
பாராளுமன்றில் அமைச்சர் சுசில் நேற்று தெரிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு மற்றும் திரிபோச போன்ற சத்துணவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் அவ்வாறு 19,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் உள்ளதுடன் யுனிசெப் நிறுவனம், உலக உணவு ஸ்தாபனம், அமெரிக்க விவசாயத் திட்டம், சீன அரசாங்கம் உட்பட பல்வேறு சர்வதேச தேசிய நிறுவனங்கள் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
200 பாடசாலைகளுக்கு உணவு வழங்குவதற்காக ஜோன் கீல்ஸ் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளதுடன் லயன்ஸ் கிளப் போன்ற அமைப்புகளும் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் தொடர்ந்து விளக்கமளித்த அமைச்சர்,
அதேவேளை, அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக அதிக நிதியை ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்துடன் சோளப் பயிர்ச்செய்கையை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.