தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி National Cadet Corps
கல்வியமைச்சின் கீழ் செயற்படுகின்ற இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாமில் மாணவ சிப்பாய்களாக பயிற்சியளிக்கப்படுகின்றனர் .அதேவேளை பாதுகாப்பு அமைச்சினால் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகளுக்கு அதிகாரிகளாக பயிற்சி அளிக்கப்படுகின்றது .
இலங்கையின் இளைய தலைமுறையை பயனுள்ள உச்ச போட்டித்தன்மை ஊடாக வலுப்படுத்தி தேசியத்தின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒருமனதோடு ஒற்றுமையாக செயற்படுகின்ற இளைஞர் படையணியாக உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணியானது அதன் சகல உறுப்பினர்களும் ஓரணியாக சிந்திக்கின்ற செயல்ப்படுகின்ற , ஆதிக்கம் செலுத்துகின்ற , நிறுவனத்தின் போட்டித்தன்மை மிக்க நிலையான முன்னேற்றத்தினை மேம்படுத்துகின்ற , நாட்டின் தேசிய அபிலாசைகள் மற்றும் விழுமியப் பண்புகளின் மேம்பாட்டிற்கு ஒன்றிணைந்து தோள்கொடுக்கும் தேசிய சக்தியாகும் .
இதன் மகுட வாசகம் ‘ஒருபோதும் ஆயத்தமின்றி இருக்காதே’ , Never Be Unprepared என்பதாகும்.
சாரண இயக்கம் ‘ எப்போதும் தாயாராய் இரு’ Be Prepared என்பதாகும்.
பாடசாலை மாணவ மாணவியரிடையே ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் 1881இல் மாணவச்சிப்பாய் உபகுழு ஒன்று கொழும்பு ரோயல் கல்லூரியில் இது ஆரம்பிக்கப்பட்டது .முதலாவது பணிப்பாளர் நாயகம் ஒரு தமிழராவார். தற்போது 142 வருடங்களாக இலங்கையில் இயங்கி வரும் அரச அமைப்பு. உலகின் பல நாடுகளிலும் NCC (மாணவர் படையணி) கணப்படுகிறது. ஆசிரியர்களாகிய படையணியின் அதிகாரிகள் மாணவர்களுக்கு பயிற்சியளிப்பர். தென்னிந்திய திரைப்படங்களில் இதுதொடர்பான காட்சிகள் உண்டு.(பேராண்மை, சிங்கம்)
வடமாகாணத்தின் 20, 22, 34, 36,37 என 5 படையணிகள் மாணவர் நடத்தை, ஆளுமை, திறன்கள், பண்புகளை விருத்தியாக்க செயற்பட்டு வருகின்றது. 20வது படையணி யாழ்ப்பணத்தை தளமாக கொண்டு 2011 முதல் செயற்பட்டு வருகிறது. 2019ஆம் வருடம் மாணவச் சிப்பாய்களின் வடமாகாண விளையாட்டுப்போட்டிகள் துரையப்பா மைதானம் , யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாணவர்களுக்கு வருடாந்த பாசறையானது NCC பயிற்சி நிலையம் அமைந்துள்ள மலைசார்ந்த மகிழ்வான இடமான ரந்தெம்பேயில் நடைபெறுவது வழக்கம். இங்கு ரந்தெனிகல நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.
இங்கு பயிற்சி பெற்ற மாணவர்களின் தரங்களாக
Cadets
7. Warrant Officer I
6. Warrant Officer II
5. Staff Sergeant
4. Sergeant
3. Corporal
2. Lance Corporal
1. Cadet
Supplementary ranks
12. Regiment Sergeant Major (RSM)
11. Regiment Quarter Master Sergeant (RQMS)
10. Company Sergeant Major (CSM)
9. Company Quarter Master Sergeant(CQMS)
8. Corps Regimental Sergeant Major – Senior Warrant Officer 1 (one in a Corps)
7. Battalion Regimental Sergeant Major – Warrant Officer 1 (one in a battalion)
6. Battalion Regimental Quarter Master Sergeant – Senior Warrant Officer 2 (one in a battalion)
5. Company Sergeant Major – Warrant Officer 2 (one in a Company)
4. Company Quarter Master Sergeant – Staff Sergeant (one in a Company)
3. Sergeant (five in a Company excluding the
CSM and CQMS/depend on the platoons in the company)
2. Corporal (fifteen in a Company)
1. Lance Corporal (fifteen in a Company)
அதிகாரி தரங்களாக
9. Major General
8. Brigadier
7. Colonel
6. Lieutenant Colonel
5. Major
4. Captain
3. Lieutenant
2. 2nd Lieutenant
1. Probationary officer
என்பன உண்டு.
சிறப்பான தரங்களை(Ranks) கொண்டுள்ள மாணவர்களுக்கு உயர்தர பரீட்சையில் பல்கலைகழக பிரவேசத்திற்கு Z. புள்ளிகள் (Z.Score) வழங்கப்படுகின்றன. இவற்றில் உயர் நிலையை அடையும் மாணவருக்கு 0.2 Z புள்ளி வழங்கப்படுவதால் பல்கலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் (இவர்களது Z புள்ளி கூட்டப்படாது இவர்களுக்கு UGC ஆல் நேர்முகப்பரீட்சை இடம்பெறும்) இவ் தேசிய மாணவர் படையணியானது (National Cadet Crops NCC) மாணவரிடையே தலைமைத்துவம், ஆளுமை, ஒற்றுமை போன்ற நற்குணங்களை வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. வடமாகாணத்தை சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் NCC மாணவர் படையணியை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணையத்தளம் – http://cadet.gov.lk/
-Lt Pathmakaran