நாடளாவிய ரீதியில் 801 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் National Fuel Pass தேசிய எரிபொருள் அனுமதி QR வசதியை பரிசோதித்து பயன்படுத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு. காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவில், கடந்த 21ஆம் திகதி முதல் இன்று (28) வரை நாடளாவிய ரீதியில் 801 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று 464 இடங்களில் 122,469 வாடிக்கையாளர்கள் இந்த QR வசதியைப் பயன்படுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், 4.4 மில்லியன் பயனர்கள் ஏற்கனவே அங்கு பதிவு செய்துள்ளதாகவும், இந்த வேலைத்திட்டம் ஆகஸ்ட் 01 ஆம் திகதி தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.