நாடுதழுவிய வேலை நிறுத்தம் – பல மாகாணங்கள் இன்றைய தவணைப் பரீட்சையை ஒத்திவைத்துள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்வி சுகாதாரம், துறைமுகம்,மின்சாரம், குடிநீர், போக்குவரத்து மற்றும் அஞ்சல் துறை சார்ந்த சுமார் 40 க்கும் அதிகமான துறைசார்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து இன்றைய தினம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
அரச வரிக்கொள்கை மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
பல்கலைக்கழக விரிவுகரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்தில் இணைந்து கொள்வதாக கல்வி அமைச்சுக்கு கடிதம் மூலம் அறிவித்தள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்களம், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் உட்பட பல பிரதான ஆசிரியர்கள் சங்கங்களும் அதிபர்கள் சங்கங்களும் இதில் இணைந்துள்ளன.
இதே நேரம் இன்று நடைபெறவிருந்த தவணைப் பரீட்சையின் வினாப்பத்திரத்தை பிறிதொரு தினத்தில் நடாத்துவது என மாகாணக் கல்வித் திணைக்களங்கள் அறிவித்துள்ளன.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென், வட மத்திய ஆகிய மாகாணங்கள் தமது பிரதேச பாடசாலைகளின் இன்றைய தினம் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சை அடுத்த வாரம் இடம்பெறும் என்று பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளன.
රටපුරා වැඩ වර්ජනයක් – පළාත් රැසක අද පැවැත්වීමට නියමිත වාර විභාග කල් දමා ඇත.
අධ්යාපන, සෞඛ්ය, වරාය, විදුලිය, ජලය, ප්රවාහන හා තැපැල් යන ක්ෂේත්රවලට අයත් වෘත්තීය සමිති විවිධ ඉල්ලීම් මුල් කර ගනිමින් අද දින වැඩ වර්ජනයට එක්ව සිටිති.
රජයේ බදු ප්රතිපත්ති සහ අත්තනෝමතික ක්රියාමාර්ගවලට එරෙහිවයි මෙම විරෝධතාව පැවැත්වෙන්නේ.
විශ්වවිද්යාල ආචාර්යවරුන් සහ අනධ්යන කාර්ය මණ්ඩල ද විරෝධතාවයට එක්ව සිටිති.
මෙම විරෝධතාවයට එක්වන බව විදුහල්පති ගුරු සංගමය අධ්යාපන අමාත්යාංශයට ලිපියක් මගින් දන්වා ඇත. ශ්රී ලංකා ගුරු සංගමය, ශ්රී ලංකා ගුරු සේවා සංගමය, ශ්රී ලංකා දෙමළ ගුරු සංගමය ඇතුළු ප්රධාන ගුරු සංගම් සහ විදුහල්පති සංගම් රැසක් ඊට සම්බන්ධ වී ඇත.
ඒ සමගම අද පැවැත්වීමට නියමිතව තිබූ වාර විභාගයේ ප්රශ්න පත්රය වෙනත් දිනයක පැවැත්වෙන බව පළාත් අධ්යාපන දෙපාර්තමේන්තු නිවේදනය කර ඇත.
බස්නාහිර, සබරගමුව, වයඹ, මධ්යම, දකුණ සහ උතුරු මැද පළාත් අද පැවැත්වීමට නියමිතව තිබූ වාර විභාගය ලබන සතියේ පවත්වන බව පාසල් විදුහල්පතිවරුන්ට දැනුම් දී තිබේ.