அரசு ஊழியர்களுக்கான மேலதிக நேர மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அரசாங்க செலவினங்களை முகாமைத்துவப்படுத்தும் நோக்கில் இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மேலதிக நேரம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் சிக்கனத் திட்டத்தின் கீழ் முழுமையாக குறைக்கப்படாது, ஆனால் சில வரம்புகளுக்கு உட்பட்டதாக இருக்கும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்..
இதன்படி, குறைக்கப்பட வேண்டிய மேலதிக நேரம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பில் கலந்துரையாடி விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக நேரம், விடுமுறை நாட்கள், வாழ்க்கைச் செலவுகள் போன்ற கொடுப்பனவுகள் தவிர, அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்திற்காக மட்டும் மாதத்திற்கு சுமார் 9300 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
ஏறக்குறைய 15 இலட்சம் பேரை உள்ளடக்கிய அரச சேவையில் பெரும்பான்மையானவர்கள் தமது கடமைகளை குறித்த நேரத்திற்குச் செய்யாமல் கடமை நேரத்திற்குப் பின்னரும் மேலதிக நேரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே வேலை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், தமது கடமை நேரத்தின் பின்னர் தமது கடமைகளை நிறைவேற்றுவோரின் எண்ணிக்கை சுமார் 600,000 எனவும் அது 40 வீதமாகும் எனவும் தெரிவித்தார்.
இந்த செயல்முறை பொது சேவைக்கு தேவையற்ற செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
රාජ්ය සේවකයන් සඳහා ලබාදෙන අතිකාල සහ අමතර දීමනා කප්පාදු කිරීමට රජය සූදානම් වෙයි. රජයේ වියදම් කළමනාකරණය කිරීමේ අරමුණින් මෙය ක්රියාත්මක කිරීමට බලාපොරොත්තු වන බව රාජ්ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්යාංශයේ ලේකම් නීල් බණ්ඩාර හපුහින්න පැවසීය.
රාජ්ය සේවකයන් සඳහා දැනට ලබා දෙන අතිකාල සහ අමතර දීමනා මෙම කප්පාදු කිරීමේ වැඩපිළිවෙළ යටතේ සම්පූර්ණයෙන්ම කප්පාදුවකට යටත් නොකරන බවත් එය යම් සීමාවකට යටත් කරන බවත් ලේකම්වරයා සඳහන් කළේය.
ඒ අනුව අතිකාල සහ අමතර දීමනා කොතරම් ප්රමාණයක් දක්වා අඩු කරනවාද යන්න පිළිබදව සකච්ඡා කර ඉදිරියේදී තීරණයක් ගන්නා බවද හෙතෙම කීවේය.
රජයේ සේවකයන්ට අතිකාල, නිවාඩු, ජීවන වියදම වැනි දීමනා හැර වැටුප් සඳහා පමණක් මසකට රුපියල් කෝටි 9300ක් පමණ මුදලක් වැය වේ.
ලක්ෂ 15කට ආසන්න ප්රමාණයකින් සමන්විත රාජ්ය සේවයේ බහුතරයක් නියමිත වෙලාවේදී සිය රාජකාරිය ඉටු නොකර අතිකාල ලබා ගැනීමේ අරමුණින් රාජකාරි වේලාවෙන් පසුව සේවය කරන බවටද අනාවරණය වේ.
එලෙස සිය රාජකාරිය, රාජකාරි වේලාවෙන් පසුව සිදු කරන ප්රමාණය ලක්ෂ හයක් පමණ වන අතර එය ප්රතිශතයක් ලෙස සියයට 40ක් වන බව රාජ්ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්යාංශයේ ජ්යෙෂ්ඨ නිලධාරියෙක් පැවසීය.
මෙම ක්රියාවලිය රාජ්ය සේවය සඳහා අනවශ්ය වියදමක් වේ.