ஆசிரியர்களின் சுயவிபரக் கோவையில் உள்ளடங்க வேண்டிய ஆவணங்கள்.
ஒவ்வொரு ஆசிரியரும் நியமனம் பெற்றது முதல் ஓய்வூ பெறும் வரையான காலப்பகுதியில் தமது சுய விபரக் கோவையில் பேண வேண்டிய ஆவணங்களை திரட்டி வழங்குவது அவசியமாகும். இவ் ஆவணங்களில் உங்களுக்கு பொருத்தமான ஆவணங்கள் அனைத்தையூம் திரட்டியூள்ளீர்களா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
- முதல் நியமனக் கடிதம்
- பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி
- முதலாவது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் என்பவற்றுக்கிடையே வித்தியாசங்கள் காணப்படுமாயின் திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது திருத்தப்பட்ட நியமனக் கடிதம்.
- பெயர் மாற்றங்கள் ஏதும் செய்யப்பட்டிருப்பின் அவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான பிறப்புச் சான்றிதழ் (பிறப்புச் சான்றிதழின் 13 ஆம் இலக்க பந்தியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம்) அல்லது / மற்றும் திறைசேரி 185 ஆம் இலக்க பிரகடணம்.
- தேசிய அடையால அட்டையின் பிரதி
- ஒப்பந்த பத்திரம் (பொது 160)
- பிரகடணம் (பொது 278)
- சத்தியப் பத்திரம் அல்லது உறுதியூரை (அரசியல் யாப்பின் 6 வது திருத்தத்திற்கு அமைய)
- சொத்துக்கள் விபரம் (பொது 261)
- முதல் நியமனத்திற்கு அமைய சேவையை ஏற்றுக்கொண்டதற்கான லொக் குறிப்பு அல்லது ஃ பயிலுனர்/பட்டதாரி பயிலுனர்/ மாணவர் ஆசிரியர்/ பயிற்றப்படாத ஆசிரியர் / ஆசிரிய உதவியாளர்/ ஒப்பந்த / தற்காலிக நியமனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பின் அது குறித்த லொக் குறிப்பு.
- முதல் நியமனத்தின் அடிப்படையில் சேவையை பெறுப்பேற்கும் போது தான் நியமனம் பெறுகின்ற பாடசாலையில் சேவை பெறுப்பேற்காது கல்வி அமைச்சிலோ அல்லது கல்வித் திணைக்களத்திலோ அல்லது வலயக் கல்விக் காரியாலயத்திலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ சேவை பெறுப்பேற்றிருப்பின் அதற்கான சான்று
- சேவை பொறுப்பேற்றல் கடிதம் மற்றும் அதற்கான லொக் குறிப்பு
- வைத்திய அறிக்கை ( பொது 169)
- மாகாண ஆசியரியர்காயின் அவர்ளது முதல் நியமனம் 1990.01.01 ஆம் திகதிக்கு முன்னராயின் மத்திய அரசின் சேவையிலிருந்து மாகாண சேவைக்கு உள்ளீர்க்கப்பட்ட கடிதம்
- முதலாவது நியமனத்திலிருந்து இற்றைப்படுத்தப்பட்ட வரலாற்றுப் பத்திரம் ( பொது 53 அ) Hளைவழசல ளாநநவ
- திருமணமானவராயின் திருமணச் சான்றிதழ்
- திருமணமானவராயின் கணவனின் அல்லது மனைவியின் பிறப்புச் சான்றிதழ்
- விவாகரத்துப் பெற்றிருப்பின் விவாகரத்துக்கான சான்றிதழ்
- துணைவர் மரணித்திருப்பின் மரண சான்றிதழ்
- குழந்தைகள் இருப்பின் அவர்களது பிறப்புச் சான்றிதழ்
- அனைத்து கல்விச் சான்றிதழ்களும் (க.பொ.த சாஃதஇ க.பொ.த உ.த பட்டம்இ பட்டப்பின் படிப்பு)
- அனைத்து தொழில் பயிற்சிகள் தொடர்பான சான்றிதழ்கள் ( ஆசிரியர் பயிற்சி. கல்வியல் பட்டப்பின்படிப்பு பேன்றன)
- அனைத்து கல்வி மற்றும் தொழிற் பயிற்சி சான்றிதழ்களினதும் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்
- தகுதிகாண் காலப் பகுதியின் பின்னர் சேவை நிரந்தரமாக்கியதற்கான கடிதம்.
- தகுதிகாண் காலப் பகுதி நீடிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான கடிதம்.
- ஆசிரியர் பதிவிலக்கம்
- விதவைகள் ஃ தபுதாரர்கள் அநாதைகள் ஓய்வூ+தியத் திட்டத்திற்கு பதிவூ செய்வதற்கான விண்ணப்பம்
- மேற்படி பதிவூ செய்து பெற்ற பதிவிலக்கம் கொண்ட அட்டை
- தேசிய பாடசாலை ஒன்றில் அல்லது வேறு ஒரு மாகாண பாடசாலை ஒன்றில் சேவையாற்றிவிட்டு அங்கிருந்து இடமாற்றம் பெற்று மாகாணப் பாடசாலை ஒன்றிற்கு வந்திருப்பின் அல்லது மாகாணப் பாடசாலை ஒன்றில் சேவையாற்றிவிட்டு தேசிய பாடசாலை ஒன்றிற்கு வந்திருப்பின். மத்திய அரிசிலிருந்து அல்லது முந்தைய மாகாண சபையிலிருந்து விடுவித்ததற்கான கடிதம்.
- மேற்படி முறைகளில் இடமாற்றம் பெற்று வந்திருப்பின் மாகாண சேவைக்கு அல்லது மத்திய அரசின் சேவைக்கு உள்வாங்கியதற்கான கடிதம்.
- ஒவ்வொரு வருடத்திலும் சம்பளப் படியேற்றம் அனுதிக்கப்பட்ட விண்ணப்பம்
- ஒவ்வொரு வருடத்திலும் சமர்ப்பிக்கப்படுகின்ற தரக் கணிப்பீட்டுப் படிவம்.
- வருடாந்த விடுமுறைவிபரம் (டீ 100 படிவத்தில் பூரணப்படுத்தப்படல் வேண்டும்)
- சம்பளமற்ற விடுமுறைகளுக்காக சேகரித்துக்கொண்டுள்ள விடுமுறைகள் மாற்றீடு செய்யப்பட்டிருப்பின் அதற்கான அனுமதிக்கடிதம்.
- சம்பளமற்ற விடுமுறைகளுகள் பெற்றிருப்பின் விடுமுறை தரப்படுத்தல் கடிதமும் சம்பளத்திலிருந்து குறைப்பதற்கு அனுமதி வழங்கிய கடிதமும்.
- இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணத்திற்கு அமைய உள்வாங்கிய கடிதம் அல்லது முதல் நியமனக் கடிதத்தை திருத்திப் பெற்ற கடிதம்.
- புதிய சேவைப் பிரமாணத்தின் அடிப்படையில் வினைத்திறன் தடை தாண்டலுக்கான மொடியூ+ல் பூரணப்படுத்தியிருப்பின் அதற்கான கடிதம்.
- சேவையில் தர உயர்வூ பெற்றிருப்பின் அது குறித்த கடிதம்.
- தர உயர்வூக்கு அமைய சம்பள மாற்றம் செய்ததற்கான கடிதம்
- ஏதாவது சம்பள உயர்வூகள் ஏற்பட்டிருப்பின் சம்பள திருத்தம் செய்த கடிதம்.
- இடமாற்றங்களுக்கான கடிதம்.
- இடமாற்றத்தின் அடிப்படையில் சேவை பெறுப்பேற்ற கடிதம்
- தற்காலிகமாக இடமாற்றம் பெற்றிருப்பின் அதற்கான கடிதம்இ அதற்கான கால நீடிப்பு செய்திருப்பின் அதற்கான கடிதம்
- கல்விக்கான விடுமுறை பெற்றிருப்பின் அதற்கான கடிதம்.
- கல்வி விடுமுறைக்கான பிணை அல்லது வேறு பிணைகள்
- வெளிநாட்டு விடுமுறை பெற்றிருப்பின் அந்த விடுமுறைக்கு அனுமதி பெற்ற கடிதம்
- வெளிநாட்டு விடுமுறை பெற்று மீண்டும் நாட்டுக்கு வந்ததனை தெரிவிப்பதற்கான கடிதம்.
- வொளிநாட்டு விடுமுறைகள் திருத்தப்பட்டிருப்பின் அதற்கான கடிதம்
- அரசுக்கு சொந்தமான வீடுகளில் தங்கியிருப்பின் குறித்த வீட்டுக்கான வாடகையினை சம்பளத்தில் கழித்த கடிதம்
- பாரட்டுதல் அல்லது குறைகள் குறிப்பிடல் தொடர்பான கடிதம். (இருக்குமாயின் – பொது – 230 டீ)
- சேவை மதிப்பீட்டு சான்றிதழ் (உதாரணம்: குரு பிரதீபா)
- ஒழுக்காற்று கட்டளை ( இருக்குமாயின்)
- ஒழுக்காற்று கட்டளையினை செயற்படுத்தியதற்கான கடிதம் (இருக்குமாயின்)
- ஒழுக்காற்று கட்டளை தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டிருப்பின் அந்த மேன்முறையீட்டின் அடிப்படையில் ஏதும் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தால் குறித்த கடிதம் (இருக்குமாயின்)
- மொழித் தேர்ச்சி குறித்த சான்றிதழ் (இருக்குமாயின்)
- பெயரில் வித்தியாசங்கள் இருப்பின் குறித்த திருத்தக் கடிதம்
- பெயரில் மாற்றம் குறித்த உறுதி மொழி
- பிக்கு ஒருவராக மாறியிருப்பின் அதற்கான சான்றிதழ்
- கடன் அட்டை
- ஏதாவது நோய் ஒன்று தொடர்பாக வைத்தய குழு ஒன்றுக்கு முன்வைக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான அறிக்கை
65. இலங்கை அதிபர் சேவைக்கு விண்ணப்பித்திருப்பின் குறித்த விண்ணப்பப்படிவத்தின் பிரதி
66. குறித்த அதிபர் சேவைக்கு தெரிவூ செய்யப்பட்டிருப்பின் நியமனக் கடிதம்
67. குறித்த சேவையில் பதவியேற்றதற்கான கடிதம் மற்றும் லொக் பதிவூ
68. குறித்த சேவைக்கான சம்பள மாற்றத்திற்கான கடிதம்
69. இது போன்று இலங்கை நிர்வாக சேவைக்குஇ இலங்கை கல்வியலாளர்சேவை என்பவற்றுக்கு விண்ணப்பித்திருப்பின் விண்ணப்பம் மற்றும் மேலே குறிப்பிட்டது போன்று கடிதங்கள்
70. ஆசிரியர் சேவைக்கு முன்னர் வேறு ஒரு அரசாங்க சேவையில் இருந்திருப்பின் குறித்த நியமனக் கடிதம் மற்றும் குறித்த சேவையிலிருந்து விடுவிப்புக் கடிதம்.
71. முன்னைய சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டதற்காக கடிதம்.
72. முன்னைய சேவைக்காக ஆவணங்கள் (சுயவிவரக்கோவை)
73. சேவைக் காலத்தில் சேவையை விட்டுச் சென்றிருப்பின் அது குறித்த கட்டளை
74. மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டிருப்பின் அதற்காக கடிதம்
75. சேவை நிலையக் குறிப்பு
76. அவசர விபத்து விடுமுறை பெற்றிருப்பின் அது தொடர்பாக அனுமதி கடிதம்
77. பிரசவ விடுமுறை பெற்றிருப்பின் அதற்கான அனுமதிக்கடிதம்
78. அரைச் சம்பள விடுமுறை பெற்றிருப்பின் அதற்கான அனுமதிக்கடிதம்
79. சம்பளமற்ற விடுமுறை பெற்றிருப்பின் அதற்கான அனுமதிக்கடிதம்
80. மேற்படி விடுமுறைகளின் முடிவில் சேவைக்கு வந்து இணைந்தது குறித்த கடிதம்
81. அரச சேவையில் சொத்துக் கடன் பெற்றிருப்பின் குறித்த கடனை அனுமதித்ததற்கான கடிதம்
82. தேர்தலில் போட்டியிடுவதற்கு விடுமுறை பெற்றிருப்பின் அதற்கான அனுமதிக் கடிதம்
83. தேர்தல் விடுமுறை மாற்றீடு செய்யப்பட்டிருப்பின் அது குறித்த அனுமதிக் கடிதம்
84. பாதுகாப்புப் படைக்கு விடுவிப்பதற்கான விண்ணப்பம்
85. பாதுகாப்புப் படைக்காக விடுவிக்கப்பட்டிருப்பின் அதற்கான கடிதம்
86. பாதுகாப்பு படையின் சேவையை முடித்துக்கொண்ட கடிதம்
87. இணைப்புச் செய்தலுக்கான கடிதம்
88. அதற்கான கால நீடிப்புக் கடிதம்
89. குறித்த இணைப்புச் செய்தலுக்கான கால முடிவில் மீண்டும் சேவை பொறுப்பேற்றுக்கொண்டதை அறிவிக்கும் கடிதம்.
90. இன்னுமொரு சேவைக்காக இரட்டை நியமன அடிப்படையில் நியமனம் கிடைத்திருப்பின் குறித்த கடிதம்
91. அந்த சேவைக்கு விடுவிக்கும் கடிதம்
92. குறித்த சேவை முடிவில் முன்னைய சேவையில் இணைந்ததை தெரிவிக்கும் கடிதம்.
93. ஏதாவது ஒரு சேவையில் பதில் கடமையாற்றக் கோரியிருப்பின் அதற்கான விண்ணப்பம்
94. பதில் கடமைக்கான நியமனக் கடிதம்
95. சேவை பொறுப்பேற்ற கடிதம்
96. சேவை நீடிப்புக்கான கடிதம்
97. தனது சேவையிலிருந்து தானாக விலகிக்கொண்டிருப்பின் அதற்கான கோரிக்கைக் கடிதம்
98. குறித்த விலகிக்கொள்ளலுக்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதற்கான கடிதம்.
99. குறித்த விலகிக்கொள்ளலை ஏற்றுக்கொண்டதற்கான கடிதம்
100. அவசர விபத்துக்கான இழப்பீடு பெற்றிருப்பின் இழப்பீட்டு விண்ணப்பம்.
101. அவசர விபத்து இழப்பீடு அனுமதி வழங்கப்பட்ட கடிதம்
102. இழப்பீடு வழங்கிய கடிதம் அல்லது குறிப்பு
103. இந்த இழப்பீடு தங்கியிருப்பவர்களுக்கு வழங்கியிருப்பின் அதற்கான கடிதம்
104. சேவையில் இருக்கும் போது மரணமடையூமிடத்து மரணப் பதிவூச் சான்றிதழ்
105. விதவைகள் ஃதபூதாரர் அநாதை கொடுப்பனவூ தொடர்பில் ஓய்வூ+தியத் திணைக்களத்திற்கும் பிரதேச செயலகத்திற்கும் அனுப்பிய கோவைகளின் பிரதி
106. மரண பணிக்கொடையினை தங்கி வாழ்பவர்களுக்கு வழங்கிய விபரம்
107. குறித்த கொடுப்பனவூ செய்த கணக்கு விபரம் மற்றும் பங்குகள் விபரம்
108. சேவையிலிருந்து ஓய்வூ பெறுவதாயின் ஓய்வூ பெறுவதற்கான விண்ணப்பம்
109. ஓய்வூ பெறச் செய்வதற்கான கடிதம்
110. ஒன்லைன் ஊடாக ஓய்வூ+தியத் திணைக்களத்திற்கு தகவல் அனுப்பில Pனு 3 படிவம்
111. ஓய்வூ+தியம் கணக்கிட்ட படிவம்
112. ஓய்வூக்கு முந்திய விடுமுறை பெற்றிருந்தால் விடுமுறை அனுமதிக் கடிதம்
இந்த ஆவணங்களின் பட்டியல் ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பட்டியலைத் தழுவி லங்கா ஜொப் இன்போ இணையத்தளத்தினல் தொகுக்கப்பட்தாகும்.
ஒவ்வொரு ஆசிரியரதும் சுய விபரக் கோவையை தமது வலக் கல்வி பணிமனை பேணும். இந்த சுயவிபரக் கோவையில் பேண வேண்டிய ஆவணங்கள்