தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதற்கான பிரேரணையை அடுத்த பதினைந்து நாட்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த முன்மொழிவின்படி, தேசிய ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் நிறுவப்படும் அதேவேளை அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளும் பீடங்களாக மாற்றப்படும்.
தற்போது கல்வி அமைச்சின் கீழ் உள்ள இக்கல்லூரிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக எழுந்துள்ள சட்டச் சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது. இதில் கல்லூரிகளின் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.