உயர் தரப் பரீட்சையை பிற்போடுமாறு விமல் வீரவன்ச கோரிக்கை
உயர் தரப் பரீட்சையை பிற்போடுமாறு கோரி பாராளுன்ற உறுப்பினரும் ஆன விமல் வீரவன்ச கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவைகள் தோற்றும் மாணவர்கள் தாம் பரீட்சைக்குத் தயாராக போதுமான காலம் வழங்கப்படவில்லை என்பதனால், குறித்த பரீட்சார்த்திகள் தயாராவதற்கு போதுமான காலத்தை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் விரவன்ச தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.