நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று ஆரம்பம்..
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திங்கட்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை நடவடிக்கைகளுக்காக ஜனவரி 23 ஆம் திகதி முதல் கடந்த 17 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய திங்கள் முதல் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டுக்கான இறுதி தவணை கல்வி நடவடிக்கைகள் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.
இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின்
மூன்றாம் கட்டம் – 2023.02.20 திங்கள் முதல் 2023.03.21 செவ்வாய் வரை நடைபெறும்
என கல்வி அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
රජයේ සහ අනුමත පෞද්ගලික පාසල්වල තුන්වන වාරයේ අවසන් අදියර අද (20) ආරම්භ කෙරෙනවා.
එම පාසල් වාරය මාර්තු 24 වනදා දක්වා පැවැත්වෙන බවයි අධ්යාපන අමාත්යාංශය සඳහන් කළේ.
රජයේ සහ අනුමත පෞද්ගලික පාසල්වල 2023 නව අධ්යයන වාරය මාර්තු 27 වන සඳුදා සිට ආරම්භ කෙරෙනු ඇති.
தொடர்புடைய செய்திகள்