பாடசாலைகளுக்கு வெள்ளி முதல் விடுமுறை
2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் நாளையுடன்(20) நிறைவடைகின்றது.
தமிழ், சிங்களப் பாடசாலைகள் அனைத்துக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதோடு, உயர் தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படும் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதிவரை தொடரும்.
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும்
2022 ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட செநற்பாடுகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
සිකුරාදා සිට පාසල්වලට නිවාඩු
2022 පාසල් වර්ෂයේ තුන්වන වාරයේ අධ්යයන කටයුතුවල දෙවන අදියර හෙට (20) අවසන් වේ.
සියලුම දෙමළ සහ සිංහල පාසල්වලට එවැනි නිවාඩුවක් ලබා දෙන බව අධ්යාපන අමාත්යාංශය නිවේදනය කර ඇති අතර, උසස් පෙළ විභාග මධ්යස්ථාන ලෙස ක්රියාත්මක වන මුස්ලිම් පාසල්වලට ද එවැනි නිවාඩුවක් ලබා දෙන බව අධ්යාපන අමාත්යාංශය පවසයි.
අධ්යාපන උසස් පෙළ විභාගය ලබන සඳුදා ආරම්භ වේ
2022 වසරේ තුන්වන අධ්යයන වාරයේ තුන්වන අදියරේ ඉගෙනුම් කටයුතු පෙබරවාරි 20 වැනිදා යළි ආරම්භ කරන බව ද අධ්යාපන අමාත්යාංශය දැනුම් දී ඇත.